நடிகரின் நண்பர்தான் அத்தனைக்கும் காரணமாம்.. நேரில் சென்று பளார் விட்ட மகன்?.. ஆத்தாடி இது வேறயா?
சென்னை: தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான அவர்; இதுவரை பார்க்காத பிரச்னையை பார்த்துவருகிறார். தனது வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று அவர் கனவில்கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்.அந்த அளவுக்கு அவரது இமேஜை பல வருடங்கள் உடன் இருந்தவராலேயே உடைக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை, மன உளைச்சலை வெளியே காண்பித்துக்கொள்ளாமல் சமாளித்துவருகிறாராம். இந்நிலையில் அவர் பற்றி புதிய கிசுகிசு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் அந்த நடிகர். இந்தப் பயணத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் வரும் என்று அவருக்கு முன்கூட்டியே தெரியும்தான். ஆனால் இந்த அளவுக்கு பெர்சனல் விஷயங்கள் எல்லாம் பொதுவெளிக்கு வரும் என அவர் நினைத்து பார்க்கவில்லை. இந்த விஷயத்துக்கு எதிர் முகாமில் இருப்பவர்கள் மீது நடிகரின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினாலும்; இது அத்தனைக்கும் காரணம் நடிகரின் வறட்டு ஈகோதான் என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

எச்சரித்த மனைவி: நடிகர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று கொஞ்சம் பேருக்கு தெரியும்தான். ஆனால் எதுவும் எல்லை மீறி போகாததால் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தார் மனைவி. ஆனால் போகப்போக நடிகரின் செயல்பாடு முழுக்க முழுக்க மாறியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பே அவரை எச்சரித்தார் மனைவியார். ஆனால் நடிகர் தான்தான் என்ற மிதப்பில் இருந்ததால் மனைவியின் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என்று கடற்கரையோர சோர்ஸ்கள் சொல்கிறார்கள்.
முடிவெடுத்த மனைவி; ஊக்கம் கொடுத்த மகன்: இனிமேலும் நடிகரோடு சேர்ந்து வாழ முடியாது என முடிவெடுக்க மனைவி ரொம்பவே தயங்கினாராம். ஏனெனில் பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார்கள்; இத்தனை வருடங்கள் வாழ்ந்தாயிற்று என தடுமாறியிருக்கிறார். அப்போது அவரது மகனோ, இனிமேலும் நீங்கள் இந்த மனிதரோடு வாழ வேண்டும். நீங்கள், நான், தங்கை மூன்று பேரும் தனியாக சென்றுவிடலாம்; விவாகரத்து கொடுங்கள் நான் உங்களை கடைசிவரை பார்த்துக்கொள்கிறேன் என்று தைரியம் கொடுத்தாராம்.
மகனும் செய்திருக்கிறார்: இருப்பினும் நடிகரின் மனைவி நீ ஒருமுறை அப்பாவிடம் பேசி பார் என்று சொன்னாராம். வேறு வழியில்லாமல் நடிகரிடம் பேசுவதற்காக சென்றாராம். ஆனால் அப்போது நடிகரோ தனது நண்பர்களுடன் ஃபுல் போதையில் இருந்தாராம். அந்த நடிகர்கள் லிஸ்ட்டில் டிவி நடிகரும் ஒருவர். அந்த டிவி நடிகரிடம் சென்று அப்பாவிடம் பேச வேண்டும் கொஞ்சம் தனியாக வர சொல்லுங்கள் என மகன் கூறினாராம். அதற்கு அந்த நடிகரோ இல்லை என் நண்பர் முடிவெடுத்துவிட்டார் என்று சொன்னாராம்.
பளார் விட்ட மகன்?: மேலும், இனிமேல் நீ ஒன்றும் அவனை பார்க்க வேண்டாம். உங்கள் அம்மாவை பிரிய அவன் முடிவு செய்துவிட்டான் என ஓபனாக உளறினாராம். இதை கேட்டு ஷாக் ஆன மகனோ எதுவாக இருந்தாலும் அவரை வந்து சொல்ல சொல்லுங்கள் என கூற; நண்பர் மறுத்துவிட்டாராம். இதனால் கோபமடைந்த மகனோ, 'அனைத்துக்கும் காரணமே நீதான். உன் வீட்டுக்கு பக்கத்தில் சில நடிகைகளை தங்க வைத்து அந்த மனிதரை கெட்டு சீரழித்துவிட்டாய். இனிமேல் உனக்கு மரியாதை இல்லை' என சொல்லி பளார், பளார் என அறைந்துவிட்டு இடத்தை காலி செய்துவிட்டாராம். மகனின் இந்த செயல்பாடு நடிகருக்கு மேற்கொண்டு ஈகோவை தூண்டிவிட; மனைவியையும், மகனையும் சும்மா விடுவதில்லை; அவர்களை வெறுப்பேற்ற வேண்டும் என கங்கனம் கட்டிதான் பல தவறான செயல்களில் ஈடுபட்டாராம். இப்போது இந்த கிசுகிசுதான் கோடம்பாக்கத்தில் தீயாக பரவியிருக்கிறது.


Click it and Unblock the Notifications















