உச்ச நடிகரை சீண்டும் மாஸ் நடிகரின் விஸ்வாசிகள்.. பொறுப்பு வந்த பின்னராவது அடக்குவாரா?

By Staff

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும் பரபரப்பு ஓயவில்லை. இப்படி இருக்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து திரை உலகம் கொஞ்சம் டல்லாகத்தான் நகர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், மீண்டும் பழைய நிலைக்கு கோலிவுட் உலகம் மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளது. அதற்கான வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் உச்ச நடிகருக்கும் மாஸ் நடிகருக்கும் இடையில் பிரச்னையை உருவாக்க சிலர் முயற்சி எடுத்து வருகிறார்கள். அதிலும் உச்ச நடிகரின் சமீபத்திய நடவடிக்கைகள் மாஸ் நடிகருக்கு எதிராக இருக்கிறது. மாஸ் நடிகர் இவ்வளவு தொல்லைகளை அனுபவிக்க காரணமே இந்த உச்ச நடிகர் தான், மாஸ் நடிகருக்கு எதிராக பல கோணங்களில் சதி நடக்கிறது. அவற்றுக்கு எல்லாம் இந்த உச்ச நடிகர் தன்னால் முடிந்த ஆதரவைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார் என்று புரளியைக் கிளப்பி வருகிறார்கள்.

Gossip Mass Actor s Fans Target Top Star Amid Political Rumours Netizens Ask if He Will Finally Intervene

ரசிகர்கள் மோதல்: இந்த புரளியை நம்பிக் கொண்டு மாஸ் நடிகரின் விசுவாசிகள் மற்றும் ரசிகர்கள் கண்மூடித்தனமாக உச்ச நடிகரையும் அவரது ரசிகர்களையும் வம்புக்கு இழுத்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த மாஸ் நடிகர் மற்றும் உச்ச நடிகருக்கு இடையில் பனிப்போர் நடைபெற்று வருகிறது. அதுவும் மாஸ் நடிகர் அரசியலுக்கு சென்று அதில் விஸ்வரூப வெற்றியைப் பெற்ற பின்னர், உச்ச நடிகர் மாஸ் நடிகரை வாழ்த்தினார்.

தடுப்பாரா மாஸ் நடிகர்?: அப்படி இருக்கையில் மாஸ் நடிகர் மற்றும் உச்ச நடிகரின் ரசிகர்களை இணையத்தில் சண்டையிட்டுக் கொள்ளச் செய்யும் வகையில் மாஸ் நடிகரின் விஸ்வாசிகள் இணையத்தில் தொடர்ந்து பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இப்போதாவது தனது ரசிகர்கள் மற்றும் விசுவாசிகளை அமைதியாக இருக்கச் சொல்லுவாரா இல்லை இப்போதும் சைலண்ட் தானா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X