Just In
- 29 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
Don't Miss!
- News
சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான வழக்கில் ரிபப்ளிக், டைம்ஸ் நவ் டிவி
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- Sports
அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது?
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராங்கித்தனம்.. செட் ஆகாது.. ஆளை மாற்ற சொன்ன மாஸ் நடிகர்.. டென்ஷனில் அந்தம்மா? பறிபோனது வாய்ப்பு!
சென்னை: முதல் படம் எப்படியோ வெற்றி பெற்று விட்டதால், இரண்டாவது படத்துக்கு, அந்த பெண் இயக்குநருக்கு பயங்கர கிராக்கி ஆனது.
தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த அந்த பிரைட் நடிகர், எப்படியும் இவங்க ஹிட் கொடுப்பாங்கன்னு நம்பி, கமீட் ஆனார். படமும் சீக்கிரமே ரிலீஸ் ஆகப் போகுது.
இந்நிலையில், அந்த இயக்குநர் அம்மாவுக்கு அடுத்து மாஸ் நடிகரை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்த நிலையில், தற்போது, அந்த வாய்ப்பு பறிபோயிடுச்சாம்.

ராங்கித்தனம்
அந்த இயக்குநர் அம்மாவின் சுபாவமே அப்படித்தானாம். ரொம்ப ரூடாகவும், ராங்கித்தனத்துடனே செட்டில் அனைவரையும் ஓடவிடுவாராம். தனது முதல் படம் வேற பெரிய ஹிட் கொடுத்த நிலையில், இரண்டாவது படத்தில், அந்த அம்மாவின் ஆட்டம் மேலும், அதிகமாகி உள்ளதாக படக்குழுவினரே பேசி வர, இந்த தகவல் கோலிவுட் காதுகளுக்கும் எட்டியுள்ளது.

சிஜி சொதப்பல்
ஆகாசத்துக்கு அந்த குருவியை பறக்க வைக்க, ரொம்ப மெனக்கட்டு வரும் இயக்குநர் அம்மாவுக்கு, தற்போது மிகப்பெரிய சிக்கல் உருவாகி உள்ளதாம். கோலிவுட் படங்களுக்கும், சிஜிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாகவே இருந்து வரும் நிலையில், இந்த படத்துக்கும் அந்த சிக்கல் தலைவிரித்து ஆடுகிறதாம்.

எகிறிய பட்ஜெட்
பிரைட் நடிகரின் தயாரிப்பு நிறுவனம் என்பதால், ஹிட் கொடுக்குறேன் என்கிற பேர் வழியில், சொன்னதுக்கும் மேலே அதிகளவில் படத்தின் பட்ஜெட் எகிறி உள்ளதாம். அந்த அம்மா போடும் ஆட்டத்தை கண்டு மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் அந்த பிரைட் நடிகர், படம் ரிலீசாகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என இருக்கிறாராம்.

மாஸ் வாய்ப்பு
இதுதான் சரியான சமயம், அடுத்து, அந்த மாஸ் நடிகரை வச்சு படம் பண்ணிட வேண்டியது தான் என எண்ணிய அந்த இயக்குநர், அவருக்காக ஒரு கதையையும் ரெடி பண்ணி சொல்லி உள்ளாராம். மாஸ் நடிகருக்கு, கதையும் பிடித்துப் போய்டுச்சு, அடுத்து அவருடன் தான் படம் கன்ஃபார்ம் என சமீபத்தில், வதந்திகளும் வைரலாக உலா வந்தன.

போர் அடிக்குது
அந்த இயக்குநர் அம்மா சொன்ன கதை, உண்மையிலேயே மாஸ் நடிகருக்கு பிடிக்க வில்லையாம். பாதி கதைக்கு மேல் ரொம்ப போர் அடிப்பதாகவும், டாக்குமென்ட்ரி போல இருப்பதாகவும் ஃபீல் பண்ண நடிகர், கதையை கொஞ்சம் மாத்துங்க, யோசிக்கலாம் என கூறியுள்ளார். இதனால், நினைத்தது நடக்காமல் வெறுங்கையுடன் திரும்பியுள்ளார்.

செட் ஆகாது
தான் சொன்ன கதையில், கொஞ்சம் மசாலாவை தூவி, இதோ மெருகேற்றி விட்டேன், இந்த கதையை கேளுங்க என சொல்ல, கடுப்பான மாஸ் நடிகர், நமக்கு இது செட் ஆகாது மேடம், அடுத்த முறை பார்க்கலாம் என அந்த பெண் இயக்குநர் கதையை ரிஜெக்ட் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளன.

வம்பு நடிகர்
மாஸ் நடிகர் அந்த கதையை ரிஜெக்ட் பண்ண விஷயம் தெரியாத அந்த வம்பு நடிகர், தான் நடித்து வரும் அரசியல் படத்துக்கு பிறகு, நாம சேர்ந்து பண்ணலாம் என பச்சைக் கொடி காட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. மாஸ் நடிகரின் படம் கிடைக்கவில்லையே என்கிற அப்செட்டை வெளியே காட்டிக் கொள்ளாமல், பிரைட் நடிகரின் படத்தை ரிலீஸ் செய்யும் வேலையை முடுக்கி உள்ளாராம் அந்த இயக்குநர்.