கொடுத்த பணமெல்லாம் வேஸ்ட்டா?.. புலம்பும் பெரும்புள்ளி.. மாஸ் நடிகருக்கு ஆதரவாக வீசிய அலை?

By Staff

சென்னை: மாஸ் நடிகரை எப்படியாவது முடக்கிவிடலாம் என அவரை எதிர்க்கும் தரப்பினர் தொடர்ந்து பல்வேறு முட்டுக்கட்டைகளையும் மோசடி வேலைகளும் செய்து வந்த நிலையிலும், கடைசி வரை உறுதியாக நின்று போராடிய நடிகருக்கு ஆதரவாக மக்கள் அலை திரண்டுள்ளதாக பேச்சுக்கள் அதிகம் புகையத் தொடங்கி உள்ளன.

நடிகருக்கு எதிராக தொடர்ந்து பல வேலைகளை பார்த்து மைக்கை கொண்டு நடிகரை தாக்கிய மீடியாக்கள் கூட தற்போது திடீரென அடுத்து அவர் வந்துவிட்டால் நம்ம நிலைமை என்ன என்கிற பீதியில் ஆட்டம் கண்டு தற்போது அவருக்கு ஆதரவான கருத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக பேசத் தொடங்கியிருப்பதாக இன்சைட் ரிப்போர்ட்டுகள் கசிந்துள்ளன.

Mass Actor seems happy after getting big supports from people apposite side very upset

எப்படியாவது வெல்ல வேண்டும் என பெரும்புள்ளி செலவு செய்த பல கோடி பணமெல்லாம் வேஸ்ட்டாக போய் விட்டதா என புலம்ப ஆரம்பித்து விட்டார் என கிசுகிசுக்கள் சுடச்சுட கிளம்பி உள்ளன.

மக்கள் அலை யாருக்கு லாபம்: மாற்றி மாற்றி போட்டு நமக்கு எதுவுமே பயனில்லை. விலை வாசி ஏறியது மட்டுமே தான் மிச்சம் என நினைத்த மக்கள் மற்றும் அந்த நடிகரால் சிறு வயது முதலே அதிகம் கவரப்பட்ட இளைஞர்கள் முதல் முறையாக வாக்கு செலுத்திய நிலைஇல், மிகப்பெரிய மக்கள் அலை உருவாகியிருப்பதாக பேச்சுக்கள் அரசியல் வட்டாரங்களில் கிளம்பி உள்ளன.

ஆடிப்போன ஹேட்டர்ஸ்: மாஸ் நடிகருக்காகத்தான் மக்கள் காலை முதலே பல தடைகளை தாண்டி வெயிலில் நின்று அதிகப்படியான வாக்குகளை செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதெல்லாம் இல்லை, மக்கள் அதிகமாக ஓட்டுப்போட அந்த விஷயம் தான் காரணம் என ஹேட்டர்ஸ் முட்டுக் கொடுத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், உள்ளுக்குள் ஒருவேளை மக்கள் மாற்றத்தை விரும்பி விட்டார்களா என்கிற பீதி தான் அதிகம் உள்ளதாம்.

பணத்தை வாங்கிட்டு: பல இடங்களில் பறக்கும் படைகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு 500 முதல் 5000 ரூபாய் வரை ஒரு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா பண்ணப்பட்ட நிலையில், பணத்தை வாங்கிக் கொண்டு மாஸ் நடிகர் சொன்னது போல மக்கள் மாத்தி ஓட்டுப் போட்டுவிட்டார்களா என்கிற அச்சம் பெரும்புள்ளிக்கு வந்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், இந்த த்ரில் எல்லாம் ரிசல்ட் வரும் வரை தான் என்றும் உண்மை நிலவரம் அப்போது தான் தெரியும் என்றும் கூறுகின்றனர். மாஸ் நடிகருக்கு ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும், ரிசல்ட் வரும் வரை பக்கு பக்குன்னு தான் இருக்கப் போகிறது என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X