மாஸ் நடிகருக்கு முழு நம்பிக்கை வந்துடுச்சாம்.. வீசுன கத்தியெல்லாம் வீணாப்போச்சேன்னு புலம்பும் புள்ளி?
சென்னை: எப்படியெல்லாம் அவப்பெயரை உருவாக்கி புதிதாக அடியெடுத்து வைக்கும் மாஸ் நடிகரை ஆள் அட்ரஸ் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என பெரும்புள்ளி போட்ட ஸ்கெட்ச் எல்லாம் தொடர்ந்து வீணாகி வருவதாக வெளியான தகவல் காரணமாக பெரும்புள்ளியின் கூடாரமே அப்செட் ஆகியிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
மாஸ் நடிகருக்கு ஆரம்பத்தில் சற்றே பயம் இருந்தாலும், என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என ரெண்டுல ஒண்ணு பார்த்து விடலாம் என சட்டையை மடிச்சிவிட்டு களத்தில் இறங்கியுள்ள நிலையில், அவருக்கு தற்போது மக்கள் செல்வாக்கு மீது முழு நம்பிக்கை வந்துவிட்டதாக கூறுகின்றனர்.

எங்கே பார்த்தாலும் ஒரு அலை வீசி வருவதை கண்கூடாக பார்த்த நிலையில் தான் எந்தவொரு கவலையும் இல்லாமல் சுற்றி வருகிறார் என்கின்றனர்.
நடிகை வைக்கும் செக்: நம்பர் நடிகையை வச்சு பெரும்புள்ளி ஒரு பிளான் போட்ட நிலையில், அவற்றை எல்லாம் சரிகட்டிவிட்டு தனது பாதையில் தொடர்ந்து தைரியமாக பயணித்து வருகிறாராம் மாஸ் நடிகர். இதுதான் சரியான சந்தர்ப்பம் என இன்னொரு நடிகை வாரிசு கிட்ட வம்பிழுக்க மறைமுகமான போஸ்ட்டுகளை போட்டு டார்ச்சர் செய்ய அவரது குடும்பத்திலும் குழப்பம் ஏற்பட தொடங்கி விட்டது என பகீர் கிளப்புகின்றனர்.
வீசிய கத்தியெல்லாம் வீணாப்போச்சு: அடிமேல் அடி கொடுத்தால் மாஸ் நடிகர் அப்படியே மண்டியிட்டு விடுவார் என பெரும்புள்ளி பிளான் போட்டு வீசிய கத்தியெல்லாம் தற்போது வீணாப்போச்சே என புலம்பும் நிலைக்கு வந்துவிட்டதாக கூறுகின்றனர். எந்தவொரு மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் கடைசி வரை மசியாமல் மிஞ்சிப் போனால் என்ன தோல்வி தானே ஆனால், கடைசி வரை போராடுவோம் என ஓடிக்கொண்டிருக்கிறாராம்.
பெரிய அலை வீசுது: அந்த பிரபலத்தின் அலை வீசிய நிலையில், மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர்கள் எல்லாம் காணாமல் போனது போல தற்போது மாஸ் நடிகரின் அலை தான் மக்கள் மத்தியில் முழுதாக வீசுகிறது என்றும் எப்படியாவது இந்த முறை அவருக்கு சப்போர்ட் செய்வது உறுதி என பலரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், மேலிடத்தில் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்துக் கொண்டே இருப்பதாகவும் பெரும்புள்ளிக்கு லேசாக பயம் வந்திருப்பதாகவும் பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











