எதையுமே ஒழுங்கா செய்ய மாட்டீங்களா? கோபப்பட்டு கத்திய மாஸ் நடிகர்.. அதுதான் காரணமா?
சென்னை: திடீரென மாஸ் நடிகரை சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகளும் சர்ச்சைகளும் வெடித்த நிலையில், அதனால் மனதளவில் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம். தனது டீமை அழைத்து எதையுமே ஒழுங்கா செய்ய மாட்டீங்களா என்றும் நடிகர் கத்தி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மாஸ் நடிகரின் படம் இத்தனை ஆண்டுகளாக பெரிய போட்டி இல்லாமல் வெளியாகி கல்லா கட்டின.
ஆனால், பக்கத்து ஸ்டேட் நடிகருடன் இந்த ஆண்டு மோதிய படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், வரும் பெரிய பண்டிகைக்கு அந்த நடிகருடன் மோதல் எப்படி இருக்குமோ என்கிற கேள்வியும் பெரிதாக கிளம்பி உள்ளது.

ஏகப்பட்ட சர்ச்சை
திடீரென மாஸ் நடிகரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. பாசிட்டிவாக டிரெண்டாக வேண்டும் என பல வேலைகளை செய்த மாஸ் நடிகரின் பெயர் தேவையில்லாமல் டேமேஜ் ஆகும் நிலையிலேயே அவரை சுற்றி அடுக்கடுக்கான பிரச்சனைகள் குவியத் தொடங்கியதால் ரொம்பவே அப்செட் ஆகி விட்டார்.

லீக்கோ லீக்
சர்ச்சைகள் ஒரு பக்கம் மாஸ் நடிகரின் தலையை பிடித்து இழுக்க மறுபக்கம் இந்த லீக் பிரச்சனை உசுரையே வாங்குது. ஏதோ ஒரு காட்சி என்றால் பரவாயில்லை. ஷூட்டிங் எடுக்கப்படும் ஒவ்வொரு காட்சியும் லீக் ஆனால் எப்புர்ரா என மனுஷன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ஏற்கனவே பவுன்சர்கள், லைட் மேனை எல்லாம் விளாசிய நடிகர் தற்போது தனது டீமையும் விட்டு வைக்காமல் கத்தி உள்ளாராம்.

ஒழுங்கா செய்ய மாட்டீங்களா
ஒரு சின்ன விஷயத்தில் இருந்து பெரிய விஷயம் வரைக்கும் அனைத்திலும் கூட இருப்பவர்களும் படக்குழுவினரும் ரொம்பவே கவனக் குறைவாக செயல்பட்டு வருவது நடிகரை ரொம்பவே டென்ஷன் ஆக்கி உள்ளது. எந்தவொரு வேலையும் ஒழுங்கா செய்ய மாட்டீங்களா என வச்சு விளாசி விட்டாராம்.

உங்களை நம்பி
உங்களை எல்லாம் நம்பி எப்படி அந்த பெரிய முடிவை எடுப்பேன் என்றும் தனது வலது கரத்திடம் கடிந்து கொண்டுள்ளார் மாஸ் நடிகர் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. தேவையில்லாத விஷயங்களில் என்னை சிக்க வைக்காதீங்க, நான் ஃப்ரீயா என் வேலையை சரியா செய்ய விடுங்க என்றும் இனிமேல் படம் வெளியாகும் வரை அனைத்திலும் கவனமாக செயல்பட வேண்டும் என எச்சரித்துள்ளார் மாஸ் நடிகர் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

அந்த விழாவில்
போனதெல்லாம் போகட்டும் வெகு விரைவாக நடைபெற உள்ள அந்த விழாவில் போன முறை நடந்தது போன்ற எந்தவொரு சிக்கலும் வந்து விடக் கூடாது. சரியாக அதற்கு ஏற்பாடுகளை கவனித்து செய்யுங்கள் என மாஸ் நடிகர் தனது டீமுக்கு அதிரடி உத்தரவை போட்டு இருப்பதாக கூறுகின்றனர். மேலும், ஏற்பட்டுள்ள சிக்கல்களையும், பிரச்சனைகளையும் அந்த விழா வருவதற்கு முன்னதாக டோட்டலாக க்ளியர் பண்ணி வைக்கவும் நடிகர் உத்தரவு போட்டுள்ளாராம்.

நெகட்டிவ் பப்ளிசிட்டி
எப்படியாவது பப்ளிசிட்டி பண்ண வேண்டும் என நினைத்து நெகட்டிவ் பப்ளிசிட்டியை கூட மாஸ் நடிகரின் உதவியாளர்கள் பண்ண நினைத்ததன் விளைவு தான் இப்படி அவர்கள் டோஸ் வாங்கிக் கட்டிக் கொள்ள காரணம் என்றும் பேசிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











