அந்த இயக்குநரை நம்பி தலையை கொடுத்த மாஸ் நடிகர்.. படம் வெளியாகும் முன்பே இப்படியொரு சிக்கலா?
சென்னை: மாஸ் நடிகர் நடிப்பில் வெளியான கடந்த சில படங்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றன. இந்நிலையில், எப்படியாவது அடுத்த படமாவது அனைவரையும் கவர வேண்டும் என்கிற நோக்கில் கடுமையாக இயக்குநர் சொல்வதையெல்லாம் தலையாட்டி கேட்டுக் கொண்டு நடித்து வருகிறார்.
இதற்கு முன் எப்போதுமே இல்லாத அளவுக்கு மாஸ் நடிகர் மாறி விட்டாரே என அவரது நண்பர்களும் சக நடிகர்களும் பார்த்து ஷாக் ஆகி வருகின்றனர்.
ஆனால், படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே உருவாகி உள்ள புதிய சிக்கல் சற்றே மாஸ் நடிகரை நடுக்கம் கொள்ளச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த இயக்குநருக்கே சொதப்பல்
இதுவரை அந்த இயக்குநர் இயக்கிய அனைத்து படங்களையும் ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் என பலருமே ஆரம்பம் முதல் கடைசி வரை பாராட்டித் தள்ளி உள்ளனர். ஆனால், ஒரே ஒரு படம் மட்டுமே இரண்டாம் பாதியில் அந்த இயக்குநருக்கு பெரும் சொதப்பல் படமாக அமைந்தது. அது குறித்த கேள்விக்கு அதற்கான காரணம் யார் என்பதை இயக்குநர் வெளிப்படையாகவே கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கோட்டையை பிடிக்க
கோலிவுட் கோட்டையில் தனது கொடியை நட்டு வைத்திருந்த அந்த மாஸ் நடிகர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சொதப்பல் படங்களை கொடுத்து தனது இடத்தை மற்ற நடிகர்களிடம் விட்டு விடும் நிலை உருவானதால் ரொம்பவே கடுப்பாகி இருந்த நிலையில், தான் இந்த முறை மீண்டும் அந்த இயக்குநர் உடன் இணைந்து பெரிய வெற்றியை படைத்தே ஆக வேண்டும் என உழைத்து வருகிறார்.

தலையை கொடுத்த நடிகர்
அதன் காரணமாகவே இயக்குநர் கேட்டுக் கொண்டதை போல இந்த முறை எந்தவொரு தலையீடும் இல்லாமல் இருக்கும் என உறுதி கொடுத்து விட்டார் அந்த நடிகர். இதுதான் சாக்கு என ஏகப்பட்ட எக்ஸ்பெரிமென்ட்டுகளை மாஸ் நடிகரை வைத்து முயற்சித்து வருகிறார் அந்த இயக்குநர்.

திடீர் சிக்கல்
ஆனால், இயக்குநரின் பேச்சைக் கேட்டு சென்று கொண்டிருந்த நடிகருக்கு திடீரென ஒரு பெரிய வருத்தம் சமீப காலமாக எழுந்துள்ளதாக கூறுகின்றனர். இதுவரை படங்களில் செம அழகாகவே தோன்றி வந்த அந்த நடிகர் கடந்த சில மாதங்களாக பார்க்கவே வயதானவரை போல வித்தியாசமாக மாறியிருப்பது அவரது நண்பர்கள் உள்பட பலருக்கும் பிடிக்கவில்லை என்கிற விஷயங்கள் நடிகரின் காதுக்குள் தொடர்ந்து விழுந்து வரவே நடிகர் சற்றே மனவேதனை அடைந்துள்ளாராம்.

மிஸ் ஆகிடுமோ
ஒட்டுமொத்தமாக இயக்குநரை நம்பி இந்த முறை இறங்கி விட்டோம். ஆனால், நம் லுக் வைஸாக இந்த முறை ஹிட் மிஸ் ஆகிடுமோ என்கிற அச்சமும் நடிகர் மனதில் எழுந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், சில காட்சிகளிலாவது வேறு ஒரு லுக்கில் பிளாஷ்பேக் போர்ஷன் வைத்தாவது தன்னை காட்ட முடியுமா என்கிற கோரிக்கை திணிப்பையும் நடிகர் வைத்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் மறுப்பு
ஆனால், இயக்குநர் தெளிவாக நடிகரின் கோரிக்கையை மறுத்து விட்டாராம். இது கண்டிப்பா வொர்க்கவுட் ஆகும் சார், இந்த ஒரு வாட்டி மட்டும் எந்தவொரு டிஸ்டர்பன்ஸும் வேண்டாம், பயப்படாதீங்க எதுவும் மிஸ் ஆகாது, என்மீது நம்பிக்கை வையுங்க என ரொம்பவே பொறுமையுடன் நடிகரின் கோரிக்கையை இயக்குநர் நிராகரித்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











