அப்பா தயவே வேண்டாம்னு போன மாஸ் நடிகர் மகன்.. இப்போ தந்தைக்கு தூது விடுறாராம்.. என்ன ஆச்சு?

By Staff

சென்னை: அப்பா தயவு இல்லாமல் சினிமா துறையில் பெரிதாக சாதித்துக் காட்டுகிறேன் என மாஸ் நடிகர் மகன் பஞ்ச் வசனம் எல்லாம் பேசிய நிலையில், தற்போது பஞ்சராகி கிடப்பதாக கூறுகின்றனர். ரசிகர்களை கவர்ந்த டாப் ஹீரோக்களை வைத்து படம் பண்ணால் தான் வெற்றி பெற முடியும் என நினைத்த மகனுக்கு இளம் நடிகர்கள் கூட நம்பி நடிக்க முன் வரவில்லை என்றதும் அதிர்ச்சியாகி விட்டாராம்.

பெரிய தயாரிப்பு நிறுவனம் என பந்தா பண்ணிக் கொண்டிருந்த வாரிசுக்கு இதுவரை படத்தை எப்போது துவங்கலாம் என்பது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் சொல்லாமல் தயாரிப்பு தரப்பு காலம் தாழ்த்தி வருவதாக கூறுகின்றனர். தயாரிப்பு நிறுவனத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், இப்போதைக்கு தனது படத்தை தயாரிக்க ஒரு பைசா கூட செலவு செய்ய மாட்டார்கள் என்பதால் சில மாதங்களாக ஆபிஸுக்கு கூட மாஸ் நடிகரின் மகன் செல்லாமல் டூர் அடித்து வருவதாக கூறுகின்றனர்.

gossip kollywood

அப்பாவின் தயவு இல்லாமல் எப்படியும் இந்த இண்டஸ்ட்ரியில் அடியெடுத்து வைக்க முடியாது என்பதை நண்பர்கள் மற்றும் சில பிரபலங்கள் மூலம் தெளிவாக புரிந்துக் கொண்ட மாஸ் நடிகரின் மகன் தற்போது அப்பாவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூது விட்டு வருவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

அம்மா தான் எல்லாம்: அம்மாவின் உதவியுடன் பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் படம் பண்ணும் வாய்ப்பை பிடித்து விட்ட மகிழ்ச்சியில் ஓவர் ஆட்டம் போட்டு வந்திருக்கிறார் மாஸ் நடிகரின் வாரிசு. ஆனால், அவருடைய சந்தோஷம் சில மாதங்கள் கூட நீடிக்காமல் சினிமா என்றால் சில பல அடிகள் விழத்தான் செய்யும் என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்துக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் அடுக்கடுக்காக வந்து அவரை டென்ஷன் செய்து விட்டதாம்.

வெளிநாட்டிலேயே இருந்திருப்பேன்: ஃபாரீன்லயே ஜாலியா இருந்திருப்பேன். இங்கே வந்து நான் நினைச்சது எதையுமே பண்ண முடியல என தனது நண்பர்களிடம் அந்த வாரிசு புலம்பித் தவித்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டு இருக்கும் சிக்கல் காரணமாக அறிவிப்பு வெளியாகி 1 வருஷம் ஆகியும் இன்னமும் ஷூட்டிங் கூட போக முடியாமல் மாஸ் நடிகரின் வாரிசு அவஸ்த்தை பட்டு வருகிறாராம்.

அப்பாவுக்கு தூது: சினிமாவில் அப்பா தயவு இல்லாமல் எப்படியாவது சாதித்து விடலாம் என நினைத்த மாஸ் நடிகர் மகனுக்கு தற்போது தான் அப்பாவின் முழு அருமையும் புரிந்துள்ளதாக கூறுகின்றனர். அப்பாவின் உதவியாளர்களே பலர் தயாரிப்பாளர்களாக மாறி படங்களை அடுத்தடுத்து தயாரித்து வரும் நிலையில், நம்முடைய படத்தையும் அவர்களில் ஒருவர் தயாரிக்க முன் வந்தால் நல்லா இருக்குமே என அப்பாவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் மகன் தற்போது தூது விட்டு வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X