கதறல் சத்தம் ஜாஸ்தியா ஆகிடுச்சு.. பெரும்புள்ளி தூக்கத்தை கெடுத்த மாஸ் நடிகர்.. இதை எதிர்பார்க்கலல!
சென்னை: மாஸ் நடிகரை ஏதோ தமாஸ் நடிகர் என நினைத்து விட்டனர் என்றே தெரிகிறது என அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியா முழுவதும் போட்டு பொளக்க ஆரம்பித்து விட்டனர். பெரும்புள்ளி தரப்பில் பலரது தூக்கத்தையும் ஒரே ஒரு மேட்டரை வைத்து மொத்தமாக முடித்து விட்டார் மாஸ் நடிகர் என்கின்றனர்.
கதறல் சத்தம் எந்தளவுக்கு இருக்கிறது என்றால், நடிகரை தாண்டி அவருக்கு சப்போர்ட்டாக இருந்த பெருவாரியான மக்களை குறை சொல்ல ஆரம்பிக்கும் அளவுக்கு மோசமாக நிலைமை சென்றுவிட்டது என்கின்றனர்.

ஆனால், நடிகர் தரப்பு வெற்றியோ, தோல்வியோ, இந்த கதறல் சத்தம் நல்லா இருக்குண்ணே என கொண்டாடி தீர்த்து வருவதாக கூறுகின்றனர்.
நடிகரின் அசைக்க முடியாத நம்பிக்கை: நாம இறங்கி வந்தா மக்கள் நமக்காக இறங்கி வருவாங்க என்பதை உச்ச நடிகர் உதறித் தள்ளிய நிலையில், அதை சரியான நேரத்தில் கையில் எடுத்தது தான் மாஸ் நடிகரின் மிகப்பெரிய வெற்றி என்கின்றனர். மேலும், தொடர்ந்து எத்தனை விதமான தொல்லைகளை தனக்கு கொடுக்கின்றனர். சாதாரண மக்கள் எல்லாம் இந்த பக்கம் வந்தால் எந்தளவுக்கு பத்திக்கிட்டு எரியும் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்ட ஆரம்பித்தது தான் நடிகரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்கின்றனர்.
நடிகர் வீசிய வலையில் விழுந்துட்டாங்க: நடிகருக்கு வலை வீசுறோம், கத்தி வீசுறோம் என தொடர்ந்து நடிகரை எதிர்க்கும் விஷயத்தை மட்டுமே செய்து கடைசியில் பெரும்புள்ளி டீம் மொத்தமாக விழுந்தது என்னவோ நடிகரின் வலையில் தான் என்றும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தனக்கான க்ரீடத்தை தானே உருவாக்கி விட்டார் என பரவலான பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
மக்களை திட்டலாமா?: மாஸ் நடிகரின் எழுச்சிக்கு காரணமே தங்கள் தரப்பில் உள்ள குறைகள் மற்றும் நெகட்டிவ் நரேட்டிவ் தான் என்பதை புரிந்துக் கொள்ளாமல், மக்கள் ஆதரவை குறைத்துக் கொண்டு விட்டு, தற்போது மாஸ் நடிகருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கும் நிலையில், மக்களை திட்ட தொடங்கியுள்ளனர். இது மேலும், பெரும்புள்ளிக்கு பெரிய மைனஸ் ஆகத்தான் மாறும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications