இனிமே டெஃபன்ஸ் ஆட்டம் எல்லாம் வேலைக்காகாது.. அஃபென்ஸிவ் ஆட்டத்தை ஆட ரெடியான மாஸ் நடிகர்?

By Staff

சென்னை: தனக்கு எதிராக எந்தவொரு பிரச்னையை கிளப்பினாலும் அமைதியாக கம்முன்னு இருந்தால் ஜம்முன்னு இருந்து விடலாம் என மாஸ் நடிகர் நினைத்துக் கொண்டிருக்க தொடர்ந்து அவரை தூங்க விடாமல் அடித்துக் கொண்டே இருந்த நிலையில், அந்த நடிகர் போல நாம இந்த மோசடி வலையில் விழுந்து விடக் கூடாது என்பதை புரிந்துக் கொண்ட நடிகர் டெஃபன்ஸ் ஆட்டத்தை தாறுமாறாக ஆடத் தொடங்கியுள்ளார் என்கின்றனர்.

இன்றைக்கு அவர் தேவையில்லாத ஆணிகளை தேவையில்லாத ஆணிகளை வைத்தே புடுங்க முடிவெடுத்து விட்டார் என்றும் கடைசியில என்னையும் அரசியல்வாதியாகவே மாத்திட்டீங்களே என முதல்வன் படத்தில் அர்ஜுன் சொல்வதை போலவே தனது சகாக்களிடம் பேசியுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Mass Actor started doing defensive game against his attackers
Photo Credit:

எங்கெல்லாம் தனது பக்கத்தில் ஓட்டை இருக்கிறதோ அதை எல்லாம் வெறும் பக்கெட் வைத்து முட்டுக் கொடுக்காமல் மொத்த ஓட்டைகளையும் தேடிப் பிடித்து ரூஃப் ஷீல்டு போட்டு கச்சேரியை ஆரம்பிக்கலாம் என களத்தில் இறங்கிவிட்டார் என்கின்றனர்.

மவுசு அதிகரிக்குது: மாஸ் நடிகருக்கு எதிராக எத்தனை கத்திகளை வீசினாலும் இந்த கத்தி வேற ரகம் என தொடர்ந்து எழுந்து நின்று மாஸ் காட்டி வருவதாலே அவருக்கான மவுசு அதிகரித்து வருகிறது என்றும் சும்மா கண்டுக்கொள்ளாமல் அந்த நடிகரை அப்படியே விட்டு இருந்தால் கூட பாஸ் நடிகர் போல டம்மி பீஸாக மாறியிருப்பார் என்கின்றனர். ஆனால், சும்மா இருக்குறவனை சூப்பர் ஸ்டார் ஆக்குறதை அந்த காலத்தில் இருந்து இன்னமும் அட்டாக் பார்ட்டி விடவில்லை என்று அவருடன் இருப்பவர்களே புலம்புவதாக கூறுகின்றனர்.

யாருக்குத்தான் பெர்சனல் மேட்டர் இல்லை: மாஸ் நடிகருக்கு எதிரான பர்சனல் பஞ்சாயத்தைக் கூட்டினால் உங்க எல்லாருக்கும் பின்னாடி இருக்கும் பர்சனல் மேட்டர்கள் அத்தனையையும் அம்பலப்படுத்த தனது படையை திரட்டி வருகிறார் என்றும் இனிமேல் அடங்கி போகமாட்டான் அடக்கிட்டுத்தான் போவான் என பன்ச் பேசும் அளவுக்கு ஃபயராக ரெடியாகி வருகிறார் என்கின்றனர்.

அதுக்கே ஆப்பு: எதை வைத்து எதிர்ப்பவர்களை முடக்குகிறார்களோ அந்த ஆயுதத்துக்கே ஆப்பு அடிக்கும் விதமாக ஏகப்பட்ட விஷயங்களை செய்யத் தொடங்கியதும் மறைமுக மிரட்டல்களையும் சட்டத்தையும் கையில் எடுக்க திட்டம் போடுவார்கள் என்றும் அதை வைத்தே அவர்களை மடக்கலாம் என்பது தான் மாஸ்டர் பிளான் என்கின்றனர். விழா முடிவதற்குள் இரண்டு பார்ட்டிகள் நடத்தும் போர் ரசிகர்களுக்கு என்னமோ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட்டுக்கு கியாரண்டி என்கிற வகையில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X