அந்த விஷயத்தில் இனி சும்மா இருக்க மாட்டேன்.. மாஸ் நடிகர் கொடுத்த ஸ்ட்ரிக்ட் வார்னிங்!
சென்னை: ஃபேன் பாய் சம்பவம் சார் ஜாலியா இருக்கும்னு சொல்லிட்டு வர இயக்குநர்களுக்கு அப்படியே குட் பை சொல்லி அனுப்பும் முடிவுக்கு மாஸ் நடிகர் வந்து விட்டாராம்.
இந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தனது அதிருப்தியை நடிகர் வெளிப்படுத்தி வந்தாலும், எப்படியும் ஹிட் ஆகிடும் என இயக்குநர் கொடுத்த நம்பிக்கையின் பேரில் தான் நடிக்கவே ஒப்புக்கொண்டதாக கூறுகின்றனர்.
திரைக்கதையை சரியாக அமைக்காமல் தேவையில்லாமல் தயாரிப்பு தரப்புக்கும் அந்த இயக்குநர் செலவுகளை இழுத்து விட்டு விட்டதாக புகார்கள் கிளம்பி உள்ளன.

படு மோசமான விமர்சனம்
ஒரு சில படங்களை தவிர முடிந்த வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் அந்த மாஸ் நடிகர். வெற்றி இயக்குநராச்சே என கொஞ்சம் ஜாலியாக விட்டுக் கொடுத்த நிலையில், இந்த அளவுக்கு படு மோசமான விமர்சனத்தை பெறும் படமாக அந்த படத்தை எடுத்து வைத்ததை எண்ணி ரொம்பவே கடுப்பாகி உள்ளாராம் நடிகர்.

சம்பளம் தான் குறிக்கோள்
பேட்டியில் இயக்குநரை பற்றி நடிகர் சொல்லும் போது கூட, நல்ல கதையை பண்ண யோசிக்கவில்லை. அடுத்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கலாம் என்பதில் தான் குறியாக உள்ளார் என்பதை சுட்டிக் காட்டி இருந்தார். மேலும், முதல் பாடல் அறிமுக வீடியோவில் கூட உங்களை எல்லாம் நம்ப முடியாது என்று நடிகர் கூறியிருந்தது எல்லாமே அவரது வெறுப்பின் வெளிபாடு தான் என்கின்றனர்.

கதை ஸ்ட்ராங்கா இருக்கணும்
ஹீரோயிசத்தை பில்ட் பண்ணும் கதைகளை விட்டு விட்டு திரைக்கதை ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்பதில், இனிமே ஸ்ட்ரிக்ட்டாக இருக்க முடிவு செய்து விட்டாராம் மாஸ் நடிகர். மேலும், தனது குழுவினரிடத்திலும் அதனை கண்டிப்புடன் கூறி விட்டாராம். கதையே இல்லாமல் வெறும் பில்டப் உடன் கதை சொல்ல யாராவது வந்தால், அப்படியே துரத்தி விட்ருங்க என்றும் நடிகர் ஆவேசமடைந்து கூறியதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

வில்லனுக்கு முக்கியத்துவம்
வெறும் ஹீரோவுக்கு மட்டும் பஜனை பாடல் பாடாமல் கொஞ்சம் வில்லன் ஏரியாவையும் நல்லா வெயிட்டாக காட்டும் படி திரைக்கதை இருப்பதை கவனமாக பார்த்துக் கொள்ளும் முடிவிற்கும் நடிகர் வந்து விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும், ஹீரோ தரப்பில் இயக்குநரை யாரும் இன்ஃப்ளூயன்ஸ் பண்ணக் கூடாது என்றும் ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டு இருக்கிறாராம்.

மீண்டும் கதை கேட்ட நடிகர்
முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும் இனிமேல் இது போன்ற பிரச்சனை எதிர்காலத்தில் வராமல் இருக்கக் வர கூடாது என்கிற உறுதிக்கு வந்துள்ள நடிகர் அடுத்த பட இயக்குநருடன் நீண்ட நேரம் ஆலோசனையில் இறங்கி உள்ளாராம். மேலும், இன்னொரு முறை திரைக்கதையை சொல்லும் படியும் கேட்டுக் கொண்ட நடிகர், இந்த முறை மிஸ் ஆகக் கூடாது என்கிற உறுதியையும் பெற்றுள்ளதாக பெரும் பேச்சு அடிபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











