மாஸ் நடிகரை பார்த்து அச்சம்.. அவர் மட்டும் அப்படி பேசிட்டா? அதுக்குத்தான் இதெல்லாம்!
சென்னை: அந்த விழாவில் மைக்கை பிடிச்சு அந்த மாஸ் நடிகர் என்னத்த பேசப் போகிறாரோ என்கிற அச்சம் தான் தொடர் சோதனைகளுக்கு காரணம் என்கின்றனர்.
உச்ச நடிகர் அரசியல் விளையாட்டில் சொதப்பி வரும் நிலையில், மாஸ் நடிகர் இதுதான் சான்ஸ் என குதித்து விடுவாரோ என்கிற பயத்தால், அவரை தட்டி வைக்க வேண்டும் என்றே இப்படி நடுக்கத்தில், அடுத்தடுத்த தாக்குதலை அவர் மீது ஏவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

அரசியல் இருக்குமா?
போன படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே கரை வேட்டிக்காரர்களை ஓடவிட்டு இருந்தார் அந்த மாஸ் நடிகர். தொடர்ந்து தனது படங்களிலும், கரை வேட்டிக்காரர்கள் செய்யும் ஊழலையும், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தோலுரித்து காட்டி வருகிறார். இந்த முறையும் அரசியல் நெடி அதிகம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பயம் தான்
அந்த பயத்தின் காரணமாகத்தான், தொடர்ந்து அந்த ஒரு நடிகரை மட்டுமே டார்கெட் செய்து சோதனைகளை முடுக்கி அவரை அடக்க பார்க்கின்றனர் என்ற பேச்சு அவருடைய ரசிகர்களையும் தாண்டி பொது மக்களிடமும் வெகுவாக எழுந்துள்ளது. படத்துக்கு படம் அதிகரிக்கும் வசூலும் மாஸும் தான் இந்த பயத்துக்கான காரணமாக கருதப்படுகிறது.

வீணாக
சும்மா கிடக்குற சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்கிற பழமொழி போல, சிவனேன்னு நடிச்சிட்டு இருக்குறவரை வேற பக்கம் களமிறங்க வச்சிடுவாங்க போல தெரிகிறது. விழா நடத்த தடை, கூட்டம் கூட்ட தடை, தொடர் சோதனை என அடுத்து அடுத்து தொல்லை கொடுப்பது பின்னர் அவர்களுக்கே ஆப்பாக முடிந்து விடும் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

பதிலடி
ரசிகர்கள் பலம் அதிகம் கொண்ட அந்த மாஸ் நடிகருக்கு, தொடர்ந்து இப்படி குடைச்சல் கொடுத்து வந்தால், பேசாமல் இருப்பார் என தப்புக் கணக்கு போட்டுள்ளார்கள். நிச்சயம், தன்னை நோக்கி பாயும் தோட்டக்களுக்கு, நிச்சயம் பதிலடி கொடுப்பார் அந்த மாஸ் நடிகர் என்பது, விரைவில் வரும் அந்த விழாவிலேயே தெரியும் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











