தெரியாத்தனமா வந்து மாட்டிக்கிட்டேன்.. விழி பிதுங்கி நிற்கும் மாஸ் நடிகர்.. மொத்தமா முடிச்சிட்டாரே?

By Staff

சென்னை: எப்படியாவது படத்தை ரிலீஸ் பண்ணிவிடலாம் என மாஸ் நடிகர் கூட இருந்த புத்திசாலிகளின் அறிவுரையை கேட்டு மேலும், மேலும், போய் வசமாக லாக் ஆகிக்கொண்டே இருப்பதை பார்த்து கடுப்பாகி விட்டாராம். இப்போதைக்கு கட்சி ஆபீஸுக்கு பெரிய பூட்டு, இந்த வருஷம் எந்த கொண்டாட்டமும் படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் கிடையாது என சொல்ல தொண்டர்கள் காண்டாகி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

நல்லா நடிச்சிட்டு, எல்லாருடனும் அன்பாக பழகி குடும்பத்துடன் ஜாலியாக இருந்த மனுஷனை அந்த பிரபலம் தான் பிரைன் வாஷ் பண்ணி போட்டிக்கு ஆளே இல்லை, நீங்க வந்தா கெலிச்சிடலாம்னு சொல்லி இப்படி இந்த நிலைக்கு வந்து நிறுத்தியுள்ளார் எனக் கூறுகின்றனர்.

Mass Actor totally upset over his latest struggles and surrounding people s bad advice

நடிகரும் தெரியாத்தனமா வந்து மாட்டிக்கிட்டேனே என்றும் இவங்களாம் புத்திசாலிங்கன்னு நினைச்சது என் தப்பு தான் என விழி பிதுங்கி இருக்கிறாராம்.

சின்ன விஷயமே முடியல: ஒவ்வொரு முறையும் தனது படத்துக்கு பிரச்னை வரும் போதெல்லாம், ஆவேசப்பட்ட நடிகர் அடங்கி போன நிலையில், தான் தயாரிப்பாளர்கள் தலை நிமிர முடிந்தது. ஆனால், அடுத்த கட்டத்துக்கு சென்றால் தான் இந்த பிரச்னையில் இருந்து விலக முடியும் என நடிகரை மூளைச்சலவை செய்த அந்த பிரபலம் தான் அனைத்துக்கும் காரணம் என்கின்றனர். அவரால், சின்ன விஷயமான்ன சினிமா ரிலீஸை கூட பண்ண முடியாமல் அதிகார பிரஷரை மொத்தமாக நடிகர் பக்கம் திருப்பி விட மாஸ் நடிகர் மரண டார்ச்சர் அனுபவித்து வருகிறாராம்.

அப்செட்டில் நடிகர்: எந்த பக்கம் போனாலும், ஏகப்பட்ட கத்திகள் தன்னை குத்திக் கிழிக்க காத்திருக்க, இங்கே டூப் வைத்து சண்டை போட முடியவில்லையே என ரியல் லைஃப்பில் தன்னை சூழ்ந்துள்ள பிரச்னைகளால், நல்லது செய்ய நினைத்தாலும் சிவாஜி ப்டத்தில் வரும் ரஜினிக்கு நேரும் கதிதான் என ரொம்பவே அப்செட் மோடுக்கு நடிகர் சென்றுவிட்டார் என்கின்றனர்.

தெரியாத்தனமா வந்து மாட்டிக்கிட்டேன்: இப்போ இதை விட்டுட்டும் போக முடியாது. இங்கேயும் இத்தனை பேர் கழுகு போல கொத்தித் தின்றாங்க, எப்படி இதை சமாளிப்பது என சில ஹைடெக் ஆசாமிகளின் உதவிகளை நாடி வருகிறார் மாஸ் நடிகர் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. கூடிய சீக்கிரமே வெள்ளைக் கொடிக்கு வேலை கொடுத்தால் தான் அனைத்தும் சரியாகும் என மாஸ் நடிகருக்கு கூடவே இருந்து எல்லாத்துக்கும் காரணமாக மாறிய பிரபலம் சொன்ன ஐடியாவை கேட்டு மேலும், டென்ஷன் ஆகிவிட்டார் என பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X