Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
மனக் கஷ்டத்தில் மாஸ் நடிகர்.. ஏமாற்றிய இயக்குநர்.. போட்ட ஸ்கெட்ச் எல்லாம் இப்படி பாழாய் போச்சே!
சென்னை: சொந்த ஏரியாவை தாண்டி மற்ற ஏரியாவிலும் உச்ச நடிகர் போல மாஸ் காட்டி முன்னேறலாம் என நினைத்த நடிகருக்கு நீங்க இன்னும் பான் இந்தியா ஸ்டார் எல்லாம் இல்லைங்க என இந்த படமும் பல்லைக் காட்டி விட்டதாம்.
இயக்குநரும் தயாரிப்பாளரும் பெரும் நம்பிக்கை கொடுத்து ஹீரோவின் கால்ஷீட்டை வாங்கிய நிலையில், சொன்ன படி அவங்க சொந்த ஏரியாவுல படம் பெருசா போகாதது மாஸ் நடிகரை மனக் கஷ்டத்தில் ஆழ்த்தி விட்டதாம்.
நடிகர் திட்டிய திட்டில் தான் இயக்குநரும் தயாரிப்பாளரும் அப்படியே செம சைலன்ட்டாக மாறி புலம்பி தவித்து வருகின்றனர்.
அதுக்கு
நான்
செட்
ஆக
மாட்டேன்..
அண்ணனுடன்
கம்பேர்
செய்துக்
கொண்ட
நடிகர்
கார்த்தி!

தொடர்ந்து சொதப்பல்
மாஸ் நடிகரின் படங்கள் சமீப காலமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்டு படம் வெளியான பின்னர் அந்த எதிர்பார்ப்புகளை கொஞ்சம் கூட பூர்த்தி செய்யாமல் பதிலுக்கு ட்ரோல் மெட்டீரியலாக மாறி வருவது நடிகரை மனதளவில் ரொம்பவே பாதிப்படைய செய்துள்ளதாம். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட், ஃபிளாப் என மாறி மாறி வந்த நிலையில், சமீப காலமாக தொடர் சொதப்பல்களையே சந்தித்து வருவது ரொம்பவே அவரை அப்செட் ஆக்கி உள்ளது என்கின்றனர்.

பக்கத்து ஸ்டேட் மார்கெட்
மற்ற ஸ்டேட் இளம் நடிகர்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நல்ல கதைகளை தேர்வு செய்து பான் இந்தியா படங்களை இயக்கி பல நூறு கோடி வசூலை குவித்து வரும் நிலையில், நாம கொஞ்சம் பக்கத்து ஸ்டேட் மார்க்கெட்டையாவது பிடிக்கலாம் என நினைத்த நடிகருக்கு அவர் நினைத்தது கொஞ்சம் கூட நடக்காமல் பலத்த அடி விழுந்தது ரொம்பவே ஷாக்காக்கி விட்டது.

நெகட்டிவிட்டி
நெகட்டிவிட்டி வேண்டாம் என நினைத்தாலும் அவரை சுற்றி ஒரே நெகட்டிவிட்டியே குவிந்து வருவது ஏன் என்றே புரியாமல் தவித்து வருகிறாராம் அந்த நடிகர். எப்படியாவது ஹிட் கொடுத்து விட வேண்டும் என கஷ்டப்பட்டு ஆடி பாடி நடித்தாலும் படம் கடைசியில் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்தவில்லையே என நொந்து போய் விட்டாராம்.

இயக்குநர் மீது கோபம்
படத்தை என்கிட்ட கொடுங்க நான் பெருசா பண்றேன் என வாக்கு கொடுத்து கால்ஷீட் வாங்கி விட்டு கடைசியில் தன்னால் முடிந்தது இவ்வளவு தான் என இயக்குநர் கைவிரித்தது நடிகரை ரொம்பவே ஆத்திரத்தில் ஆழ்த்தி உள்ளது. படத்தின் ரிசல்ட் வெளியானதுமே இயக்குநரை கூப்பிட்டு திட்டி விட்டாராம். அதன் வெளிப்பாடே இயக்குநர் செல்லும் இடங்களில் எல்லாம் படத்தின் ட்ரோல்கள் குறித்து புலம்பித் தள்ள காரணம் என்கின்றனர்.

அடுத்த படம் மீது நம்பிக்கை
அடுத்தடுத்து 2 படங்கள் பெரிய அடி வாங்கிய நிலையில், அடுத்த படத்தின் மீது தான் தற்போது முழு நம்பிக்கையையும் வைத்து இருக்கிறாராம் அந்த மாஸ் நடிகர். இதுவரை மற்ற நடிகர்களை நம்பி இருக்காமல் தனது ஃபேஸ் வேல்யூ ஒன்றே போதும் என நினைத்து இருந்த நடிகர் இப்போ எத்தனை நடிகர்களை வேண்டுமானாலும் படத்தில் போட்டுக்கோ, உங்க இஷ்டத்துக்கு படம் பண்ணுங்க.. ஆனால், எனக்கு பெரிய ஹிட் வேணும். அது மட்டும் தான் நான் எதிர்பார்க்குறது என ஒட்டுமொத்த பொறுப்பையும் இயக்குநர் தலைமீது சுமத்தி விட்டு காத்திருக்கிறாராம்.