கொஞ்சம் அடக்கி வாசிங்கடா.. உங்களால என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது.. மாஸ் நடிகர் கெஞ்சல்!

By Staff

சென்னை: சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய ஆளுமையாக தான் இருக்க வேண்டும் என்பதற்காக பலருக்கும் பணத்தை வாரி இரைத்து பில்டப்புகளை ஏற்றி இருந்தார் அந்த மாஸ் நடிகர்.

ஆனால், அதே வேலையை உச்ச நடிகர் கொஞ்சம் செலவு செய்தே எளிதில் பிடித்து விட்ட நிலையில், இரண்டு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் மூக்கு உடைந்தது மாஸ் நடிகருக்குத்தானாம்.

இந்நிலையில், சோஷியல் மீடியா ஆர்மியை அழைத்து கண்டிப்பதை தாண்டி கெஞ்சி தயவு செய்து அமைதியா இருங்கடா என மாஸ் நடிகர் கேட்டுக் கொண்டதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Mass actor upset over his social media army done a overdose negativity against other actors

அவருடைய ஆதரவு முக்கியம்: சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி உச்ச நடிகரின் ஆதரவும் அவரது ரசிகர்களின் ஆதரவும் ரொம்பவே முக்கியம் என்பதை கடந்த சில நாட்களில் மாஸ் நடிகர் நன்றாகவே உணர்ந்து விட்டதாக கூறுகின்றனர். நல்லா ஓடிய படத்தையே ஃபிளாப் படமாக மாற்றிய சக்தி உச்ச நடிகரின் ரசிகர்கள் பண்ண அலப்பறையால் தான் நடந்தது என்பதை புரிந்துக் கொண்டு தான் அமைதியாகி விட்டாராம் மாஸ் நடிகர்.

பாதிப்பை ஏற்படுத்திய ஆர்மி: சோஷியல் மீடியா ஆர்மியை வைத்து ஜொலிக்க நினைத்த நடிகருக்கு ஒட்டுமொத்த ஜோலியையும் அந்த ஆர்மியின் சிலரே முடித்து விட்டது தான் நடிகரை மனதளவில் ரொம்பவே புண்படுத்தி விட்டதாம். அதனால், தான் அந்த விழாவில் கூட ரசிகர்கள் யாரையும் அதிகம் சேர்க்க வேண்டாம் என்கிற முடிவுக்கே நடிகர் வந்து விட்டதாக கூறுகின்றனர்.

அட்மினுக்கு செம டோஸ்: தனது அட்மினை நம்பி சோஷியல் மீடியாவில் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என அதிகளவில் பணத்தை வாரி இரைத்த நிலையில், அவர் இதையெல்லாம் பெரிய பொருட்டாகவே கண்டுக் கொள்ளாமல் ஜாலியாக அனைவரையும் ஃப்ரீ ஹேண்டாக விட்ட நிலையில், நடிகருக்கு எதிராக ஏகப்பட்ட நெகட்டிவிட்டி கிளம்பி உள்ளதாம். இப்படியெல்லாம் எனக்கு எதிரா இருந்தா நான் நிச்சயம் அரசியல் பக்கம் வரவே மாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி அதிர வைத்துள்ளாராம்.

வெள்ளைக்கொடி: இந்நிலையில், மாஸ் நடிகரின் சமூக வலைதள ஆர்மியினர் தற்போது இதுவரை எதிர்த்து வந்த உச்ச நடிகர் மற்றும் டாப் நடிகரை மட்டுமின்றி அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும் வெள்ளை கொடி காட்டும் வேலையில் இறங்கி விட்டதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X