டோட்டல் டென்ஷனில் மாஸ் நடிகர்.. போட்ட ஸ்கெட்ச் எல்லாம் ஃபெயிலா போன ஃபீலிங்.. முதலுக்கே மோசமா?

By Staff

சென்னை: பெரியளவில் இந்த படத்திற்கு செலவு செய்ததே போட்டதை விட இரட்டிப்பாக வசூல் ஈட்ட வேண்டும் என்கிற குறிக்கோளை வைத்துத் தான். ஆனால், மாஸ் நடிகர் ஒவ்வொரு காய்களையும் நகர்த்த நகர்த்த அதற்கு சரியான செக் வைக்கப்பட்டு கடைசி வரை கலங்கடித்து விட்டதாக கூறுகின்றனர்.

எதிர்பார்த்த எதுவுமே இந்த முறை நடைபெறாமல் மிஸ் ஆகிக் கொண்டே போவதை பார்த்து பயங்கர கடுப்பாகி விட்டாராம் நடிகர். அந்த தயாரிப்பாளரை நம்பி பொறுப்பை கொடுத்தால் காது கிழிய பேசிய அளவுக்கு செயலில் ஒன்றையும் செய்யவில்லை என்கிற கடுப்பில் தயாரிப்பாளரை கண்டபடி திட்டி அனுப்பி விட்டார் என்கின்றனர்.

Mass actor upset over last minute issues

டோட்டல் டென்ஷன்: கடைசி நேரம் வரை திக் திக் நொடிகளுடன் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க வேண்டுமா? என்கிற கேள்வியே அந்த மாஸ் நடிகருக்கு எழுந்திருப்பதாக கூறுகின்றனர். நம்மை பார்த்து ஏன் இவ்வளவு பயம், அப்படியென்றால் நமக்கு அது பாசிட்டிவ் தானே என்று கருதினாலும், தொடர்ந்து வரும் தொல்லைகளை சமாளித்துக் கொண்டே வருவது நடிகருக்கு சங்கடத்தை கொடுத்து இருப்பதாக பேச்சுக்க அடிபட்டு வருகின்றன.

எதுவும் சரியாக நடக்கல: பல திட்டங்களை தீட்டி இந்த படத்தின் வெளியீட்டை வேறலெவலில் நடத்த வேண்டும் என்றும் அந்த அளவுக்கு கடுமையான உழைப்பை கொட்டி நடித்திருக்கிறோம் என நினைத்த நடிகருக்கு கூட இருந்தவர்களால் எதையுமே சரியாக செய்ய முடியாத நிலை உருவானதால் தான் நடிகர் சைலன்ட் மோடுக்கே சென்று விட்டதாகவும் கூறுகின்றனர்.

வந்தால் மலை: கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்பது போல நடிகர் தனது கடமையை ஆன்ஸ்க்ரீனில் செய்து விட்டாராம். ஆனால், ஆஃப் ஸ்க்ரீனில் வழக்கம் போல செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியவில்லையே என்கிற வருத்தம் நடிகரை வாட்டி வருகிறதாம். வந்தால் மலை போனால், போகட்டும் என்கிற ஜென் மன நிலைக்கே வந்து தற்போது அமைதி காத்து வருகிறார் நடிகர் என்கின்றனர்.

முதலுக்கே மோசம்: எதிர்பார்த்த அளவுக்கு பல வேலைகள் நடைபெறாத நிலையில், படத்தை நம்பி பல கோடிகளை இறக்கிய நிலையில், முதலுக்கே மோசம் என்கிற நிலை தான் வந்திருப்பதாகவும் பல இடங்களில் இருந்து கடைசி நேரம் வரை கழுத்தில் கத்தி வைக்காத குறையாக பிரச்சனை செய்து வர அனைத்தையும் சமாளிக்க போராடி வருகிறாராம் நடிகர் என தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X