Don't Miss!
- News
உறுதியாக சொன்ன டிடிவி தினகரன்.. ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் அமமுகவை ஆதரிப்பாரா? அப்போ பாஜக? குழப்பம்!
- Finance
ஈக்விட்டி F&O முதலீட்டாளர்கள் ஷாக்.. 89% பேருக்கு நஷ்டம்..!
- Sports
ஐபிஎல் தொடருக்கு வந்த ஆபத்து.. கடும் அதிருப்தியில் அணி நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கும் பிசிசிஐ
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
போட்டியால் செம கோபத்தில் இருக்கிறாராம் மாஸ் நடிகர்.. அதனால் தான் அவரை கண்டுக்கவே இல்லையாம்!
சென்னை: எப்போதுமே அந்த சக போட்டியாளர் குறித்து நட்பாக பேசி ரசிகர்கள் மத்தியில் போட்டி விதையை விதைக்காமல் இருந்து வந்த மாஸ் நடிகர் இந்த முறை ரசிகர்களை சற்று அதிகமாகவே கொம்பு சீவி விட்டுள்ளார் என்றும் அதன் காரணமாகத்தான் ரசிகர்கள் கூடிய அந்த விழாவில் அந்த போட்டி நடிகர் குறித்து மாஸ் நடிகர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்கின்றனர்.
இந்த போட்டியே சுத்தமாக நடிகருக்கு விருப்பம் இல்லை என்றும் மறுபடியும் கிளாஷ் ஆகி வசூல் குறைந்தால் என்ன செய்வது என தலையை பிய்த்துக் கொண்டாராம்.
அதன் வெளிப்பாடாகவே நிகழ்ச்சியில் வேற எந்த பெரிய நடிகர்களையும் அழைக்காமல் தான் தான் நடு நாயகமாக தெரிய வேண்டும் என தயாரிப்பாளர் சில ஆப்ஷன்கள் கொடுத்தும் நோ சொல்லி விட்டார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இனியும் முரட்டு சிங்கிள் இல்லை.. கவர்ச்சி ஜாம்பியின் காதலில் விழுந்தாரா அந்த 54 வயது நடிகர்?

யாரும் வேண்டாம்
மாஸ் நடிகரின் சினிமா நிகழ்ச்சி பெரும் பிரம்மாண்டமாக நடக்க பல முன்னணி நடிகர்களை அழைத்து வந்து புகழ் பாட வைக்கலாம் என சில பெரிய டோலிவுட் நடிகர்களையே தயாரிப்பு தரப்பு ஏற்பாடு செய்திருந்ததாம். ஆனால், கடைசி நேரத்தில் யாரும் வேண்டாம். அதன் பிறகு அந்த நடிகர் வந்து பேசியதால் என் படம் ஓடுச்சு அவர் தான் ப்ரமோஷன் பண்ணி தந்தார் என பேசுவார்கள் என கடுமையாக நோ சொல்லி விட்டாராம்.

போட்டி நடிகர் பற்றி
வழக்கமாக தனது சினிமா விழாக்களில் ரசிகர்கள் சண்டையை கட்டுப் படுத்த போட்டி நடிகர் பற்றி கொஞ்சம் உயர்வாக பேசுவது வழக்கம். ஆனால், இந்த முறை தனக்கு யாருமே போட்டி இல்லை என்கிற ரீதியில் தான் நடிகரின் பேச்சு இருந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் ஷாக்கில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்களை தூண்டி விட்டு
இந்த முறை அந்த நடிகருடன் பெரும் போட்டி இருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக தனது படத்தை ஓட வைக்க ரசிகர்களால் மட்டுமே முடியும் என்பதால் எந்தவொரு போட்டி நடிகர் பற்றியும் புகழ்ந்து பேசாமல் ஒரேயடியாய் ரசிகர்களை கொம்பு சீவி விட்டு இருக்கிறார் மாஸ் நடிகர் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

போட்டி பிடிக்கவில்லை
ஏற்கனவே இந்த ஆண்டு பெரிய படத்துடன் போட்டி போட்டு பெரிய அடி வாங்கிய நிலையில், இந்த முறை முன்னதாகவே தனது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு யாரும் போட்டிக்கு வர மாட்டார்கள் என நினைத்திருந்த நிலையில், அந்த நடிகர் அதே பண்டிகை தேதியில் நானும் போட்டிக்கு வரேன் என முடிவு பண்ண நிலையில், இந்த போட்டியில் கொஞ்சம் கூட மாஸ் நடிகருக்கு விருப்பம் இல்லையாம்.

அந்த வரிகள்
அதே போல தொடர்ந்து போட்டா போட்டியாக அந்த போட்டி நடிகர் பல விஷயங்களை இவருக்கு எதிராக செய்து வருவதும் கடைசியாக வெளியான அந்த பாடல் வரிகள் உள்பட அனைத்துமே நடிகரை ரொம்பவே டென்ஷன் ஆக்கியுள்ளதாம். அந்த கோபம் காரணமாகத்தான் இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கூட அந்த நடிகர் பற்றியும் அவர் படம் குறித்தும் யாரும் ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக வார்ன் செய்து விட்டார் என பேச்சுக்கள் உலா வருகின்றன.