தூக்கமே போச்சு.. மண்டையை பிய்த்துக் கொள்ளும் மாஸ் நடிகர்.. ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டாரோ?
சென்னை: சிவனேன்னு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த மாஸ் நடிகரை மண்டையை கழுவி நீங்க தான் இனி எதிர்காலமே என்று உசுப்பி விட்டு தற்போது அவரது உடம்பையே ரணகளமாக மாற்றிவிட்டாராம் கூட இருக்கும் வழிகாட்டி என ஏகப்பட்ட கிசுகிசுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
சினிமாவில் கவனம் செலுத்தி நடிக்க முடியாமல், அடுத்த இலக்கை நோக்கி நகர முடியாமல் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்தது போல மாஸ் நடிகர் கடந்த சில நாட்களாக தூக்கமின்றி தலையை பிய்த்துக் கொண்டு வருவதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

அனைத்துக்கும் காரணமே அவர் மலை போல நம்பியவர் பார்த்த பலே வேலை தான் என்கின்றனர். அதிரடியாக இதற்கு ஒரு எண்ட் கார்டு போட வேண்டும் என்பதில் தான் தற்போது மாஸ் நடிகர் குறியாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
தூக்கமே போச்சாம்: தனது புதிய படங்கள் வெளியாகும் போது கூட மனுஷன் இந்தளவுக்கு அப்செட்டாகவோ டென்ஷனாகவோ இருந்தது கிடையாதாம். படம் எப்படி இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் உருவாக்கி வைத்திருக்கும் ரசிகர்கள் சாம்ராஜ்யம் அந்த படத்தை ஓட்டி விடுவார்கள் என்கிற மன நிம்மதி எப்போதும் இருந்து வந்ததால் நிம்மதியாகவே நடிகர் தூங்கி வருவாராம். ஆனால், அவர் புதிதாக எடுத்துள்ள முடிவு காரணமாகவும் அதன் பின்னணியில் நடக்கும் பல பிரச்சனைகள் காரணமாகவும் கடந்த சில வாரங்களாகவே நடிகரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்கின்றனர்.
சிதறும் கவனம்: ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்கிற எண்ணம் சமீபத்தில் தான் நடிகருக்கு கள நிலவரங்களை நன்றாக ஆராய்ச்சி செய்த பின்னர் புரிந்துள்ளதாகவும் அவர் ஹீரோவாக இருக்கும் போது அவரை உசுப்பேற்றியே அந்த வழிகாட்டி தனது வேலையை சாதித்து விட்டார் என்பதை புரிந்துக் கொண்ட நடிகரால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட கடந்த சில நாட்களாக கவனம் செலுத்த முடியவில்லையாம்.
எண்ட் கார்டு போடணும்: மண்டையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு பிரச்சனை தலைக்கு மேல் சென்று கொண்டிருந்ததை ரிலாக்ஸாக உற்றுநோக்கிய நடிகர், எல்லா பிரச்சனைக்கும் இன்றோடு எண்ட் கார்டு போட வேண்டும் என்கிற முடிவில் சில முக்கிய முடிவுகளை எடுக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன்பாகவே நடிகர் பின் வாங்கி விடுவாரோ என்கிற அச்சமும் அவரை நம்பி இருக்கும் லட்சக் கணக்கானோர் மத்தியில் பீதியை கிளப்பியிருப்பதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications