ஷட்டரை சாத்தலாமா.. பெருசா திறக்கலாமா?.. தீவிர ஆலோசனையில் மாஸ் நடிகர்.. அதுமட்டும் நடந்தா?
சென்னை: புது ரூட் எடுத்து புல்லட் பாண்டி கணக்கா பல தடைகளை தாண்டி மாஸ் நடிகர் மாஸ் காட்டி வரும் நிலையில், ஷட்டரை சாத்திவிட்டு ஓடலாமா? அல்லது கடையை இன்னும் பெருசா திறக்கலாமா? என்கிற தீவிர ஆலோசனையில் இருந்து வருவதாக கூறுகின்றனர்.
எந்த அளவுக்கு தனக்கான செல்வாக்கு இருக்கிறது என்றும் தன்னை இந்த ரூட்டுக்கு இழுத்து விட்டவர்கள் எந்தளவுக்கு தேறுகின்றனர் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து பார்த்து வருகிறார் என கூறப்படுகிறது.

இதே ரூட்டில் செல்லலாமா? அல்லது பழைய ரூட் பக்கம் பல்டி அடிக்கலாமா? என்பதை வரும் ரிசல்ட்டை வைத்து முடிவு செய்யலாம் என்கிற முழு மனதுடன் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறார் என்கின்றனர்.
குழப்பமான மனநிலை: மாஸ் நடிகர் தனது போராட்டம், தான் பார்த்த வேலைகளில் முழு திருப்தியடையவில்லை என்றாலும், ஓரளவுக்கு திருப்தி அடைந்துள்ளார் என்றே தெரிகிறது. அதற்கு காரணம் மக்கள் அவர் மீதுள்ள நம்பிக்கை மட்டுமே. ஆனால், தனக்கு கிடைத்த வரவேற்பு போலவே தனது ஒட்டுமொத்த டீமுக்கும் கிடைக்குமா? யாரெல்லாம் நல்லா பர்ஃபார்மன்ஸ் பண்ணாங்க, பண்ணல என்கிற ரிப்போர்ட்டை எடுத்து அலசி பார்த்து வருவதால், ஒருவித குழப்பமான மனநிலையிலேயே உள்ளார் என்கின்றனர்.
பில்டப் எல்லாம் முடியப் போகுது: இதுவரை தன்னுடன் இருந்துக் கொண்டு வெறும் வெத்து பில்டப் பண்ணவங்க முகத்திரை எல்லாம் கிழியப் போகும் நேரம் நெருங்கி விட்ட நிலையில், சிலர் மயான அமைதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மாஸ் நடிகரே தன்னுடைய மாஸ் பக்காவாக வெளிப்படுமா? அல்லது பலத்த அடிவாங்குமா? என்பதையே கணிக்க முடியாமல் கம்முன்னு தான் இருக்கிறாராம்.

ஷட்டரை சாத்தலாமா? பெருசா திறக்கலாமா?: ஒருவேளை எதிர்ப்பு அலை காரணமாக மக்கள் சப்போர்ட் பெருசாக கிடைத்து விட்டால் பெருசா கடையை போட்டு விடலாம் என்கிற முடிவில் உள்ளாராம். ஆனால், அதே சமயம் பிம்பிலிக்கா பிலாப்பி என அல்வா கொடுத்து விட்டால் இத்துடன் விளையாட்டுச் செய்திகள் நிறைவடைந்தது என ஷட்டரை சாத்திவிட்டு கிளம்ப முடிவு செய்துவிட்டார் என்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் நடிகரின் நிலைமை மற்றும் முடிவு வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications