இந்த வயதில் விவாகரத்தா? எல்லாத்துக்கும் காரணம் அதுதான்.. மாஸ் ஹீரோவின் மோசமான புத்தி!

By Staff

சென்னை: வாரிசு நடிகரான மாஸ் நடிகர் மனைவியின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வாரிசு நடிகரான இவர் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகர் என பெயர் எடுத்துள்ளார்.

Mass actor who divorces beauty actress

மாஸ் நடிகர்: பாலிவுட்டில் 60 முதல் தற்போது வரை ஸ்டார் நடிகராக மாஸ் காட்டி வரும் ஒரு பிரபலத்தின் மகனான இவர், தந்தையை போல சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். இவர் சினிமாவிற்கு வந்த புதிதில் தொடர்ந்து இவர் நடித்த படம் வெற்றிப்பெறவில்லை என்றாலும் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து நல்ல நடிகர் என பெயர் எடுத்தார்.

அழகு நடிகை: இதையடுத்து, தன்னைவிட வயதில் மூத்த அழகு நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த அழகு நடிகைக்காக பலர் தவம் கிடந்த போதும், அந்த அழகு நடிகை இந்த வாரிசு நடிகரை, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மனைவிக்குத்தான் மரியாதை: இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டாலும், தன்னைவிட மனைவிக்கு தான் ஊடகங்கள் மத்தியில் மரியாதை இருப்பதால், அது வாரிசு நடிகருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும், கட்டுப்பாடு உள்ள பெரிய குடும்பம் என்பதால், இத்தனை ஆண்டுகள் இதை வாரிசு நடிகர் பொருத்துக்கொண்டு இருந்தார்.

விவாகரத்து முடிவு: ஆனால், அண்மையில் அழகு நடிகை வரலாற்று சிறப்பு மிக்க ஒரு படத்தில் நடித்து மீண்டும் பத்திரிக்கைக்கு தீனி போட்டுள்ளார். இதனால், வாரிசு நடிகரின் மனதிற்குள் இருந்த ஈகோ மீண்டும் எட்டிப்பார்க்க,16 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறார். இதில் அழகு நடிகைக்கு விருப்பம் இல்லை என்றாலும், வாரிசு நடிகர் விடாபிடியாய் விவாகரத்து வேண்டும் என்று நிற்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X