அப்பா ஏன் இப்படி மாறிட்டாரும்மா.. அம்மாவிடம் அழுது புலம்பிய மாஸ் நடிகரின் குழந்தைகள்.. என்ன ஆச்சு?

By Staff

சென்னை: மாஸ் நடிகரின் திடீர் மாற்றத்தை அவரது மனைவி ஏற்றுக் கொண்டாலும் குழந்தைகள் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவரது பிரிவால் வாடி வருவதாகவும் கோடம்பாக்கத்தில் பகீர் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. மாஸ் நடிகரின் மனைவி வெளிநாட்டில் எல்லாம் இல்லை என்றும் சென்னையில் தான் தனது குழந்தைகளுடன் தனியாக உள்ளார் என்றும் கூறுகின்றனர்.

மாஸ் நடிகரின் பாதை மாற்றத்துக்கு அவரது மனைவி அனுமதி கொடுக்காமல் தவிர்த்து வந்த நிலையில் தான் இருவருக்கும் இடையே இதுபோன்ற பிரச்சனைகள் வெடித்து அது பெரிய விரிசலாக மாறியுள்ளதாக கூறுகின்றனர்.

gossip kollywood divorce

ஆனால், தனது கணவருக்கு களங்கம் ஏற்பட்டு அவரது கனவு கலைந்து விடக்கூடாது என்பதற்காகவே மனைவி மெளனம் சாதித்து வருகிறார் என்றும் ஆனால், குழந்தைகள் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்க வேண்டாம் என்று கூறுவதாகவும் பிரபலம் ஒருவர் வெளிப்படையாக பேசியிருப்பது பகீர் கிளப்பியுள்ளது.

நினைத்ததை முடிப்பவன்: தான் நினைத்த விஷயத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்பதில் மாஸ் நடிகர் உறுதியாக உள்ளாராம். ஆனால், குடும்பத்திலேயே அவரது லட்சியத்துக்கு எதிராக அணி திரண்ட நிலையில், அவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம். அதன் காரணமாகத்தான் மனைவியுடன் சண்டை போட்டார் மாஸ் நடிகர் என்கின்றனர்.

கணவரை நினைத்து கவலை: நல்லது செய்ய நினைத்தாலும் சூழ்ச்சி உலகத்தில் அதை எல்லாம் செய்யவிட மாட்டார்கள். நமக்கு எதுக்கு தேவையில்லாத பிரச்சனை. ஒதுங்கியிருப்போமே நமக்காகவும் நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் என கணவரை நினைத்து மனைவி கவலைப்பட்ட நிலையில் தான் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தனது முடிவால் எந்தவொரு பிரச்சனையும் வரக்கூடாது என நடிகர் ஒட்டுமொத்தமாக அவர்களை விட்டு ஒதுங்கி இருக்கிறார் என அந்த பிரபலம் போட்டுடைத்துள்ளார்.

குழந்தைகளுக்கு கோபம்: ஆனால், அம்மாவின் பேச்சை மதிக்காமல் அப்பா இப்படி தனக்கு பிடித்ததை செய்வேன் என அடம்பிடிப்பது குழந்தைகளுக்கு பிடிக்கவில்லையாம். அப்பாவுக்கு எதிராக பிரச்சனைகளை கிளப்பலாம் என்றும் பப்ளிக்காக இந்த பஞ்சாயத்தை போட்டு உடைத்தால் தான் நமக்கான பிரச்சனை தீரும் என குழந்தைகள் சொன்ன போதிலும், அதெல்லாம் வேண்டாம் உங்களுக்கு ஒன்றும் புரியாது. உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள் என அம்மா அடக்கி வாசிக்க வைத்து விட்டார் என்றும் பேச்சுக்கள் காத்து வாக்குல கசியத் தொடங்கி உள்ளன. இதெல்லாம் எங்க போய் முடியும் என்கிற பயமும் இருப்பதாக நடிகருக்கு நெருங்கிய பிரபலம் ஒருவர் பூதத்தை கிளப்பி விட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X