மாஸ் நடிகர் மீது மனைவிக்கு கோபமே இல்லையாம்.. பொய்களை கிளப்பி விடுவதே அந்த பெரும் புள்ளி தானாம்?

By Staff

சென்னை: திருமண உறவில் செட்டாகவில்லை என்றால் இருவரும் பிரிந்து வாழ்வது தான் சரி என பல பிரபலங்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதனை சுமூகமாகவே முடித்துக் கொள்கின்றனர். ஆனால், மாஸ் நடிகரின் விவாகரத்து பிரச்னையையும் தேவையில்லாமல் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்த அந்த பெரும்புள்ளி பார்த்த வேலை தான் நடிகரின் மனைவி பற்றிய தேவையற்ற செய்திகளை கிளப்பியது என பகீர் கிளப்புகின்றனர்.

தொடர்ந்து மாஸ் நடிகரை முடித்து விட வேண்டும் என்கிற நோக்கில் பல வேலைகளை பார்த்து வருகிறாராம். டைரக்ட்டாக மாஸ் நடிகர் போல பேசாமல் செயலில் அத்தனை கோபத்தையும் காட்டி வருகிறார் என்கின்றனர்.

Mass Actor Wife didn t do anything against his husband but some enemies only spreading hate

மாஸ் நடிகரின் படம் லீக்கானது முதல் அவரது மனைவி நடிகருக்கு எதிராக பேசப் போகிறார் என கிளப்பி விட்டது வரை அவரது டீம் பார்க்கும் வேலை தான் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

டைரக்ட் எதிரி கிடையாது: மாஸ் நடிகருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து சிக்கல்களை கொடுப்பது அவருடைய டைரக்ட் எதிரி கிடையாது என்கின்றனர். ஆனால், இன்னொரு பெரும் புள்ளி தான் இந்த வேலைகளை பார்த்து இரு தரப்புக்கும் இடையே சண்டையை பலமாக மூட்டி அதில், குளிர் காய்ந்து வருவதாக திடுக்கிடம் தகவல்கள் கசிந்துள்ளன.

மனைவி எதிர்க்கவில்லை: மாஸ் நடிகரை அசிங்கப்படுத்த வேண்டும் என அவரது மனைவி நினைத்திருந்தால் இத்தனை ஆண்டுகள் எல்லாம் அமைதி காத்திருக்க மாட்டார் என்றும் எப்போதோ அவரது வேலையை காட்டியிருப்பார் என்று கூறுகின்றனர். மீடியாக்களை சந்தித்துப் பேச வேண்டிய எந்த அவசியமும் அவருக்கு இல்லை என்றும் யாரிடமும் பணம் வாங்கிக் கொண்டு அவர் நடிகருக்கு எதிராக வேலை பார்க்கவும் மாட்டார் என்கின்றனர்.

பொய்யை பரப்பி: எப்படியாவது நடிகர் அரசியலில் கொடி நட்டு விடக் கூடாது என்றும் இத்தனை ஆண்டுகளாக போராடியும் நமக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. நேற்று வந்தவன் எப்படி இவ்வளவு செல்வாக்கை பெறலாம் என்கிற பொறாமை எண்ணத்தால் தான் அந்த பெரும் புள்ளி டபுள் கேம் ஆடி வருகிறார் என்கின்றனர். கூடிய சீக்கிரமே மாஸ் நடிகருக்கு எதிராக அவர் நடத்தும் நரித்தன நாடகம் எல்லாம் அம்பலம் ஆகும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X