தமாசு நடிகர் படம் பார்க்க டைம் இருக்கு.. கணவர் படம் பார்க்க நேரமில்லையா?.. அதுதான் காரணமா?
சென்னை: மாஸ் நடிகருக்கும் அவரது மனைவிக்கும் பஞ்சாயத்து என பல பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், அதெல்லாம் இல்லை இருவரும் ஒன்றாகத்தான் இருக்காங்க என்பது போல கூறப்பட்டது.
ஆனால், தமாஸ் நடிகர் நடித்த படத்தை பார்க்க ஓடோடி வந்த மாஸ் நடிகரின் மனைவி தனது கணவர் படத்தை இதுவரை கண்டுக் கொண்டது போல தெரியவே இல்லையே என தற்போது இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது.

மனைவி மட்டுமின்றி நடிகர்களின் வாரிசுகள் கூட எந்தவொரு கொண்டாட்ட மன நிலையிலும் தென்படவே இல்லை என்றும் பேசிக் கொள்கின்றனர்.
அப்செட்டில் மாஸ் நடிகர்: அந்த இயக்குநரின் முந்தைய படம் ரசிகர்கள் மத்தியில் கிளப்பிய பெரிய அதிர்வலையை தனது படம் உருவாக்கவில்லையே என்கிற கவலை நடிகரை ரொம்பவே ஆட்கொண்டிருப்பதாகவும், முதல் முறையாக முழு படத்தையும் பார்க்கும் போது தனக்கு ஏற்பட்ட ஃபீலிங் தான் ரசிகர்களுக்கும் ஏற்பட்டு இருப்பதை அறிந்து அப்செட் ஆகி உள்ளார்.
தமாஸ் நடிகர் படத்தை பார்த்தாங்க: மாஸ் நடிகரின் மனைவி அந்த தமாஸ் நடிகரின் படத்தை முதல் நாளே பார்த்தாங்க.. ஆனால், தனது கணவரின் படத்தை ஏன் கண்டுக்கவே இல்லை என்கிற கேள்வியை நடிகரின் ஹேட்டர்கள் சோஷியல் மீடியாவில் கிளப்பி உள்ளனர்.
முத்தம் தான் பிரச்சனையா?: உதட்டு முத்த காட்சிகளில் மனைவியின் அன்பு கட்டளையை ஏற்று இதுவரை அமைதியாக இருந்து வந்த நடிகர் இந்த முறை குளிருக்கு இதமாக நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்தது மற்றும் மேலும் பல விஷயங்களை மனைவி கேள்விப் பட்டதால் தான் இருவருக்கும் இடையே பிரச்சனையே வெடித்து நடிகரை விட்டு விலகி விட்டதாக பஞ்சாயத்தே கிளம்பியது என்றும் கூறுகின்றனர்.
மகனும் சைலன்ட்: அப்பாவின் படத்தை உலகமே கொண்டாடி கொண்டிருக்கையில், சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்துள்ள வாரிசு அப்படியே எந்தவொரு கருத்தையும் சொல்லாமல், மெளனமாக இருப்பது ஏன் என்றும் அப்பா மீது மகனுக்கும் அதிகளவில் கோபம் இருப்பது உண்மை தான் போல என சினிமா வட்டாரத்தில் மீண்டும் அந்த சர்ச்சை பஞ்சாயத்து கிளம்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











