கல்யாண வரம் வேண்டி ஆன்மிக யாத்திரை.. மாஸ் நடிகர் கனவு பலிக்குமா?

Recommended Video

மாஸ் நடிகர் கல்யாண வரம் வேண்டி ஆன்மிக யாத்திரை

சென்னை: குடியும் கும்மாளமுமாக ராத்திரி முழுவதும் கொட்டம் அடித்து விட்டு, பகலில் தூங்கும் அந்த மாஸ் நடிகரால், பல தயாரிப்பாளர்கள் இரவிலும் தூக்கத்தை தொலைத்து விட்டு தவிக்கின்றனராம்.

மீண்டும் பழைய ஃபார்முக்கு வர வேண்டி குடும்பம் வற்புறுத்துவதால், கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மிக பாதைக்கு திரும்பி வரும் அந்த நடிகர், தற்போது ஆன்மிக யாத்திரைக்கும் செல்ல உள்ளாராம்.

வேற லெவல்

வேற லெவல்

ஒரு காலத்தில் இவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் வேற லெவல் உச்சத்தில் இருந்தது. ஆனால், அவரது சோம்பேறித்தனம் மற்றும் தகாத நண்பர்கள் சேர்க்கையால், குடியும் கும்மாளமுமாக காலத்தில் விரையமாக்கி வருகிறார். இதனால், அவரக்கு தற்போது சினிமாவில் மார்க்கெட் சரிந்துள்ளதாம்.

கம்பேக்

கம்பேக்

மணியான இயக்குநர் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் ஆனார் அந்த மாஸ் நடிகர். எப்போது வந்தாலும், அவருக்கு தோள் கொடுத்து தூக்கி விடும் அவரது விஸ்வாசமான ரசிகர்கள், மீண்டும் தனது தலைவன் வந்து விட்டான் என நம்பி அலப்பறை செய்தனர். ஆனால், ஒரே படத்தில் மீண்டும் ராஜா கூஜாவாக ஆகிவிட்டார்.

நாத்திகம்

நாத்திகம்

சிலரது சேர்க்கையால், மூளைச்சலவை செய்யப்பட்ட அந்த மாஸ் நடிகர் திடீரென நாத்திகத்தில் குதித்து குத்து குத்துவென பாடல்கள் போட்டார். ஆனால், இப்போது, ஆன்மிக அரசியலில் ஈர்க்கப்பட்டு, ஆன்மிக யாத்திரை புறப்பட ஆயத்தமாகியுள்ளார்.

கல்யாணம் கைகூடுமா

கல்யாணம் கைகூடுமா

அந்த அரசியல் படத்துக்காகத்தான், ஆன்மிக யாத்திரை செல்ல உள்ளார் என பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், அடுத்த ஆண்டுக்குள் கல்யாணம் நடக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் போட்ட அன்பு கட்டளைக்கு அடிபணிந்து தான் அந்த ஆன்மிக பயணத்தை மேற்கொள்கிறாராம். எதுவாக இருந்தாலும், சரி அவர் எப்போது வந்தாலும், அவருக்கான ரசிகர் கூட்டம் அவருக்காக காத்திருக்கும் என்பதில் மாற்றமிருக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X