அந்த பெரிய போட்டியே இல்லைன்னு தெரிஞ்சிடுச்சு.. பிசினஸை டபுள் மடங்காக உயர்த்தும் மாஸ் நடிகர்!

By Staff

சென்னை: மாஸ் நடிகர் படத்திற்கு பிசினஸ் ஆகவில்லை என்கிற நிலை இருந்ததற்கு காரணமே பக்கத்து ஸ்டேட்டில் பெரிய பட்ஜெட் ஹீரோவின் படம் வெளியாகிறது என்பதால் தான்.

ஆனால், சமீபத்தில் அந்த படத்துக்கு நேர்ந்த சம்பவத்தால், விநியோகஸ்தர்கள் எல்லாம் தற்போது மாஸ் நடிகர் படத்தை வாங்க போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதான் சரியான நேரம் இந்த ஏரியாவிலும் நம்முடைய மார்க்கெட்டை உயர்த்தி விட வேண்டியது தான் என நினைத்த நடிகர் தயாரிப்பாளரை அழைத்து பிசினஸை டபுள் மடங்காக உயர்த்த உத்தரவிட்டு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஏரியா விட்டு ஏரியா

ஏரியா விட்டு ஏரியா

எந்த ஏரியாவானாலும் தனக்கு எந்தவொரு பயமும் இல்லை என துணிச்சலுடன் தனது ஏரியாவை விட்டு இன்னொரு ஏரியாவில் கெத்தாக காலடி எடுத்து வைத்திருக்கிறார் அந்த மாஸ் நடிகர். ஆனால், அவருக்கு நடித்தால் பெரிய பட்ஜெட் படத்தில் தான் நடிப்பேன் என அடம்பிடித்து நடித்து வரும் அந்த பிரம்மாண்ட நாயகனின் அடுத்த படம் பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

டம்மி டப்பாஸ்

டம்மி டப்பாஸ்

சரவெடியா இருக்குமா? வாணவேடிக்கையா வெடிக்குமா என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல ஒரு விஷயத்தை இறக்க ஒட்டுமொத்த நாடே ட்ரோல் செய்வதும், எதிர்ப்பதுமாக வெறியுடன் கிளம்பி விட்டது. படத்தை ஏமாற்றி ரசிகர்கள் தலையில் இனியும் கட்ட முடியாது என்பதை புரிந்து கொண்ட படக்குழு பிசினஸ் பண்ண வேறு யுக்திகளை கையில் எடுத்துள்ளது.

பிசினஸ் மைண்ட்

பிசினஸ் மைண்ட்

இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி காய் நகர்த்தினால் செம செக்மேட் வைக்கலாம் என்பது மட்டுமின்றி இன்னொரு புதிய மார்க்கெட்டையும் ஓப்பன் செய்ய முடியும் என்பதை புரிந்து கொண்டு மாஸ்டர் பிளான் போட்டுள்ளாராம் அந்த மாஸ் நடிகர் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

இதுதான் போனி ஆகும்

இதுதான் போனி ஆகும்

அடுத்த பெரிய பண்டிகையை முன்னிட்டு வரவுள்ள படங்களில் இதுதான் மக்கள் மத்தியில் போனி ஆகும் என்பதை விநியோகஸ்தர்களும் புரிந்து கொண்ட நிலையில், பிரம்மாண்ட நாயகனின் டென்ட்டை காலி செய்து விட்டு இங்கே கூடத் தொடங்கி விட்டனர் எனக் கூறுகின்றனர். விரைவில் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த அதிரடி

அடுத்த அதிரடி

மாஸ் நடிகரின் அடுத்த படம் எந்தளவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும் என்பது சந்தேகம் தான் என்றாலும், போட்டியாக வந்த படத்திற்கு இது எவ்வளவோ பெட்டர் என சொல்லும் அளவுக்கு ஹிட் ஆகி விடும் என்கின்றனர். ஆனால், வெயிட்டாக இண்ட்ஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் அளவுக்கு அடுத்த அதிரடியை களமிறக்க செம ஷார்ப்பான திட்டங்களை வகுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X