மறைமுகமாக அடுத்த படத்துக்கு கதை கேட்ட மாஸ் நடிகர்.. டைரக்டர் இவ்ளோ தைரியமா பேச அதுதான் காரணமா?
சென்னை: சினிமாவுக்கு டாட்டா காட்டிட்டு கிளம்ப போகிறேன் என குறை மனசாகவே மாஸ் நடிகர் சொல்லியிருக்கிறார் என்றும் மறைமுகமாக அடுத்த படத்துக்கான கதையையே அவர் கேட்டு விட்டதாகவும் பகீர் தகவல்கள் கசிந்துள்ளன. சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்து விட்ட நிலையில், இதற்கு மேல், தனக்கு இந்த இடத்தை கொடுத்த மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்கிற முடிவுடன் நடிகர் புதிய பாதையை தேர்வு செய்திருக்கிறாராம்.
ஆனால், களத்தில் இறங்கிய பிறகு தான் அந்த முள் நாற்காலி குறித்தும் முள் க்ரீடம் குறித்தும் நடிகருக்கு போக போக புரியத் தொடங்கியிருக்கிறது. மேலும், மக்களிடத்தில் திடீரென பெரிய மாற்றத்தை எல்லாம் உண்டு செய்து விட முடியாது என்றும் அந்த களத்தில் இறங்கிய பிறகு தான் மாஸ் நடிகருக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து வருவதாக கூறுகின்றனர்.

இருந்தாலும், கடைசி வரை எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்காமல் அவர் ஓயமாட்டார் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த லேட்டஸ்ட் தகவல்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
துணை முதல்வர் ஆகிட்டே நடிக்கிறாங்க: டோலிவுட்டில் பவன் கல்யாண் எல்லாம் துணை முதல்வர் ஆன பிறகும் படம் படங்களில் நடித்து வருவது ரசிகர்களையும் மக்களையும் எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்கின்றனர். கோலிவுட்டிலும் மாற்று பாதையை தேர்வு செய்த பலரும் மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சரித்திரங்கள் நிறையவே இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இயக்குநர் கான்ஃபிடண்ட்: கண்டிப்பாக மீண்டும் மாஸ் நடிகர் நடிக்க வருவார் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறாராம் அந்த வயலென்ஸ் இயக்குநர். மேலும், ரகசியமாக நடிகர் பார்த்து வரும் சந்திப்புகள் குறித்த தகவல்கள் அவருக்கு சென்ற நிலையில், தான் தொடர்ந்து நடிகரை மீண்டும் எப்படியாவது மடக்கி பிடித்து விட வேண்டும் என அவர் பேசி வருவதாக கூறுகின்றனர்.
கதை கேட்கும் மாஸ் நடிகர்: இத்துடன் சினிமா செய்திகள் முடிந்து விட்டதாக நடிகர் எண்ட் கார்டு போட்டாலும், திரை மறைவில் ரகசியமாக மீண்டும் அந்த டாப் இயக்குநர் ஒருவரை சமீபத்தில், சந்தித்து மாஸ் நடிகர் பேசியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அடுத்த படத்துக்கான கதையை அவர் கேட்டு விட்டார் என்றும் பெரிய தயாரிப்பு நிறுவனம் மேலும், பல கோடி சம்பளத்தை நடிகருக்கு கொடுக்க ரெடியாக இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை என்பது அடுத்த ஆண்டு தெரிந்து விடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











