ஹீரோயினுக்கு ரூட் விடும் இயக்குநர்.. பட விழாவால் அம்பலமான லீலைகள்.. கண்டிப்பாரா மாஸ் நடிகர்?
சென்னை: மாஸ் நடிகரை வைத்து காலேஜ் படத்தை இயக்கி வரும் அந்த இயக்குநர், படத்தில் நடித்து வரும் ஹீரோயினை ரூட் விடுவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
மாஸ் நடிகரின் பட விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. பட விழாவின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில், நாயகியுடன் அந்த இயக்குநர் ரொம்ப நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும் தான் இப்படி புகைய ஆரம்பித்துள்ளது.
இயக்குநரின் ரொமான்ஸ் சேட்டை குறித்து அறிந்த சிலர், எந்த புத்துக்குள்ள எந்த பாம்பிருக்குன்னு தெரியலையேன்னு கிசுகிசுத்து வருகின்றனர்.

அல்வா
குறைந்த காலத்தில் சர சரவென்று கொடி கட்டிப் பறக்கும் அந்த இயக்குநர், மாஸ் நடிகருக்கு ஜோடி என்று அழைத்து வந்த அந்த பக்கத்து ஸ்டேட் ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்து வருவதாகவும், மாஸ் நடிகருக்கே கடைசியில் அல்வா கொடுத்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் ரூமர் பரவி வருகிறது.

ஒட்டி உரசி
வதந்திகளை நிஜமாக்கும் விதமாக சமீபத்தில் நடந்த அந்த பட விழாவில் இருவரும் பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து கொள்வதும், ஒட்டி உரசி, பேசி சிரித்துக் கொள்வதுமாக இருந்தது அந்த மாஸ் நடிகரின் ரசிகர்கள் மத்தியிலும் கோபத்தை கிளறியுள்ளது. இவரை என்னமோன்னு நினைச்சா இப்படி பண்றாரேன்னும் காண்டாகி உள்ளனர்.

இதனால் தானா
டோலிவுட்டின் முன்னணி நடிகைகளும், பாலிவுட் நடிகைகளும் போட்டி போட்டு காத்திருக்க, இந்த காரணத்திற்காகத்தான் இவருக்கு சான்ஸ் கொடுத்தாரா அந்த இயக்குநர் என்கிற ரீதியிலும் ரசிகர்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர். மாஸ் நடிகரின் கவனத்துக்கு செல்லாமல் இது நடக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கொளுத்திப்போடு
மாஸ் நடிகரின் பட விழா குறித்து எதையும் பேச முடியாமல் வாய் அடைத்துப் போயிருக்கும் ஹேட்டர்கள் தான் இதுபோன்ற ரூமர்களை பரப்பி வருவதாகவும், அந்த இயக்குநரின் அசுர வளர்ச்சியை பார்த்து பொறாமை படும் ஒரு சிலர் தான் இப்படியொரு கொளுத்திப் போடு வேலையை பார்த்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











