மத்தவங்களுக்கு ஓரங்கட்டுது இந்த நடிகைக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகுது?
சென்னை: மீ டூ என்று கூறியதால் ஒரேயொரு நடிகையின் கெரியர் மட்டும் பிக்கப் ஆகியுள்ளது.
பாலிவுட்டில் மீ டூ என்று முதன் முதலாக கூறிய நடிகைக்கு பலரும் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இதையடுத்து நடிகை மீண்டும் வெளிநாட்டிற்கே கிளம்பப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மீ டூ புகார் தெரிவிக்க திட்டமிட்ட பெரிய நடிகைகள் என்ன காரணத்தாலோ அமைதியாகிவிட்டனர்.

பெயர்
மீ டூ என்று கூறியவர்களில் பெரும்பாலானவர்கள் பெரிய ஆட்கள் இல்லை. இந்த காரணத்தினால் விளம்பரம் தேட, கெரியரை மேம்படுத்த அவர்கள் பாலியல் புகார் தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துவிட்டது. மீ டூ என்பது விளம்பரம் தேட துவங்கப்பட்ட கேவலமான இயக்கம் என்று சில நடிகைகளே கூறியுள்ளனர்.

பாதிப்பு
மீ டூ என்று கூறிய பெண்களின் கெரியர் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார் மீது குற்றம் சாட்டினார்களோ அவர்கள் அதை மறுத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கத் துவங்கிவிட்டனர். மீ டூ என்று கூறும் பெண்களை தரக்குறைவாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீ டூ என்ற ஒரேயொரு நடிகையின் வாழ்க்கை மட்டும் வேறு மாதிரி மாறிவிட்டது.

படங்கள்
பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த ஒரு நடிகையின் சினிமா கெரியர் தற்போது சூப்பராக உள்ளது. மீ டூ என்று அவர் கூறும் முன்பு அவரின் கெரியர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தது. அது எப்படி இந்த நடிகைக்கு மட்டும் ஒர்க்அவுட் ஆகிறது என்று நினைக்கலாம். அதற்கு ஒரு காரணம் உள்ளதாம்.

புகார்
பெரிய தலைகளின் லீலைகளை வெளியிடப் போவதாக அந்த நடிகை அறிவித்தார். அவர் சும்மா இருப்பதால் தானே மீ டூ என்கிறார் என அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்பு அளித்துள்ளனர். இதனால் அந்த நடிகை மீ டூவை மறந்துவிட்டார். மீ டூ என்று கூறி நன்றாக இருப்பது அவர் ஒருவர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











