twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இவர்களில் யார் அடுத்த "மீடூ".. பெரும் பதைபதைப்பில் கோலிவுட்!

    By Siva
    |

    சென்னை: மீ டூ புகாரில் அடுத்து எந்த பிரபலத்தின் பெயர் வரப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை நடிகைகள், மீடியாவை சேர்ந்த பெண்கள் என்று பலரும் வெளியிட்டு வருகின்றனர். பாலிவுட்டில் பெரிய தலைகளின் பெயர்கள் எல்லாம் இந்த புகாரில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

    கோலிவுட்டில் மீ டூ இயக்கத்தை பாடகி ஒருவர் துவக்கி வைத்துவிட்டார்.

    பிரபலங்கள்

    பிரபலங்கள்

    பாலிவுட்டில் தினம், தினம் யார் பெயராவது பாலியல் புகாரில் வருகிறது. கோலிவுட்டில் தற்போது தான் துவங்கியுள்ளது. சில்மிஷத்திற்கு பெயர் போன அந்த நடிகரின் பெயரை யார் சொல்லப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு தான் பலருக்கும். முதல் ஆளாக அவர் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலரின் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறார் அவர்.

    சில்மிஷம்

    சில்மிஷம்

    சில்மிஷ பார்ட்டி ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பிளே பாய் நடிகர் வேறு இருக்கிறார். சத்தமில்லாமல் சேட்டை செய்வதற்கு பெயர் போன பிளே பாய் பற்றி பெரிய பட்டியலே வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அவர் பற்றி யார் முதலில் புகார் கூறப் போகிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை அவரால் நொந்து நூடுல்ஸான அந்த நடிகையாக இருக்குமோ?

    சேட்டை

    சேட்டை

    நம்ம திறமையான நடிகர் வேறு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு இளம் நடிகைகளுடன் ஜாலியாக உள்ளார். அவர் பெயர் ஏற்கனவே கசிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் யாராவது மீ டூ என்று அவரின் பெயரை விரைவில் சொல்லலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

    பெண்கள்

    பெண்கள்

    அழகு ராசா வலையில் விழுந்து எழுந்து சென்ற பெண்கள் பட்டியலை பார்த்தால் பார்த்தவர்களுக்கு நிச்சயம் கண்ணை கட்டிவிடும். அந்த பெண்கள் எல்லாம் கிளம்பி வந்து மீ டூ என்று கூறினால் அவர் கதி அதோ கதி தான். அவர் மட்டுமா அவரின் நண்பரும் சில்மிஷத்திற்கு பெயர் போனவர் தான். அவரும் கூட சிக்கும் வாய்ப்பு உள்ளது.

    ஆன்ட்டி

    ஆன்ட்டி

    நல்ல திறமை உள்ள இளம் நடிகர் ஒருவர். அவர் ஆசைப்பட்டால் ஆன்ட்டியாக இருந்தாலும் விட மாட்டார். அப்படி அவர் ஒரு ஆன்ட்டியை பிக்கப் பண்ணியது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பெயரும் கூட மீ டூ பட்டியலில் வரக்கூடும். யார் மீதாவது கண் வைத்துவிட்டால் அவரை அடையாமல் விட மாட்டார் அந்த அமைதி ஹீரோ. அவர் பெயர் எல்லாம் வெளியே வந்தால் வீட்டில் பூகம்பமே வெடிக்கும். அடுத்தது யாரோ, அடுத்தது யாரோ?

    English summary
    As Me too movement is gaining momentum in Bollywood, people are expecting the same in Kollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X