"கிசு கிசு" கார்னர்
மீனாவுக்கும் மலையாள நடிகரான ஜெயராமுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக செய்தி உலவுகிறது. இதனால்ஜெயராமின் மனைவியும் முன்னாள் நடிகையுமான பார்வதி கடும் டென்சனில் இருக்கிறார்.
மலையாளத் தாயாருக்கும், தெலுங்குத் தந்தைக்கும் பிறந்தவரான மீனா தமிழ் திரையுலகில் தற்போது வாய்ப்புகள்இல்லாமல் இருக்கிறார். இருப்பினும் மலையாளத்தில் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
அப்படி ஒரு படத்தில் நடித்தபோது ஜெயராமுக்கும் மீனாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு விட்டதாக மலையாளத்திரையுலகில் பலமாகவே பேசப்படுகிறது.
இப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி வருவதாகவும், இதை மீனாவின் தாயார் மல்லிகா கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இந்தச் செய்தியால், ஜெயராமின் மனைவி பார்வதி பெரும் அதிர்ச்சில்ஆழ்ந்திருப்பதாகவும் அவர்களின் குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதையடுத்து தனது கணவரின் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்திவிட்ட பார்வதி, ஜெயராம் நடிக்கும்படங்களின் ஷூட்டிங்கிற்கு, தானும் உடன் வந்து செல்ல ஆரம்பித்துள்ளார்.
ஏற்கனவே பிரபு தேவா, கே.எஸ்.ரவிக்குமார் என பலருடன் கிசுகிசுக்கப்பட்டார் மீனா. இப்போது ஜெயராமுடன்கிசுகிசுக்கப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











