»   »  மீரா, எஸ்ஜே சூர்யா கல்யாணம் ஓவர்?

மீரா, எஸ்ஜே சூர்யா கல்யாணம் ஓவர்?

Subscribe to Oneindia Tamil

மீரா ஜாஸ்மினும், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் சத்தம் போடாமல் மோதிரம் மாற்றிக் கல்யாணம் செய்துவிட்டதாக புதிதாக ஒரு தகவல் கோலிவுட்டில் படு வேகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

சண்டக்கோழி மீரா ஜாஸ்மினும், மன்மத ராசா எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து திருமகன் என்ற படத்தில் நடித்துவருகிறார்கள். இந்தப் படத்தில் நடிக்க ஆள் கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டார் சூர்யா. எல்லாம் அவர் மீதுஏறிக் கொண்ட பிளேபாய் இமேஜ்தான் காரணம்.

பின்னர் ஒரு வழியாக மீரா ஜாஸ்மின் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் ஏகப்பட்ட கண்டிஷன்களைப்போட்டார். சூர்யா என்னைத் தொடக் கூடாது, நெருக்கமான காட்சிகள் இருக்கக் கூடாது, குறிப்பாக உம்மாகாட்சிகள் கூடவே கூடாது என்று பலப்பல கண்டிஷன்களைப் போட்டுத்தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்மீரா.

தேனிப்பக்கம் ஷூட்டிங் ஆரம்பித்த பிறகும் கூட அவர் காதல் காட்சிகளில் நடிப்பதில் ஏகப்பட்டகட்டுப்பாடுகளை காட்டி வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இருவரைப் பற்றியும் ஒரு வதந்திகிளம்பியது.

மீராவும், சூர்யாவும் சீரியஸாக காதலிக்க ஆரம்பித்து விட்டனர். விரைவில் கல்யாணம் என்று கிளம்பிய அந்தசெய்தியால் கோலிவுட்டில் நெர்வஸ்னஸ் ஜாஸ்தியாகிப் போனது. ஆனால் இந்த செய்தியை சூர்யா உடனடியாகமறுத்தார். இதெல்லாம் உண்மையே இல்லை என்று புலம்பலாக பதில் சொன்னார்.

ஆனால் மீரா தரப்பிலிருந்து எந்த மறுப்பும் வரவில்லை. இதனால் காதல் உண்டா, இல்லையா என்பது தெரியாமல்மண்டை காய்ந்து போனார்கள் கோலிவுட் வாலாக்கள். இந்த வதந்தி அப்படியே அமுங்கிப் போய் விட்டது.

ஆனால் இப்போது புதிதாக ஒரு மேட்டர் கிளம்பியுள்ளது. அதாவது சமீபத்தில் சூர்யாவும், மீராவும்பெங்களூருக்குப் போய் அங்குள்ள பிரபலமான ஒரு சர்ச்சில் வைத்து சத்தம் போடாமல் மோதிரம் மாற்றிக்கல்யாணம் செய்து கொண்டார்கள் என்பதுதான் அந்த புதுச் செய்தி.

மீரா கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல சூர்யாவும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்என்றாலும் மதம் கிருஸ்தவம் தான்.

இந்த திருமண செய்தியாவது உண்மையா, அல்லது புரளியா எனத் தெரியவில்லை. சூர்யா, மீரா தரப்போ மூச்சுகூட விடாமல் கமுக்கமாக இருக்கிறது.

ப்ளீஸ், சொல்லிருங்கப்பா.

Read more about: sj suryameera married
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil