Just In
- 41 min ago
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- 54 min ago
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- 1 hr ago
அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்!
- 1 hr ago
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
Don't Miss!
- News
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி
- Sports
3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்!
- Automobiles
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீராவின் 6வது கல்யாணம்!
மீரா ஜாஸ்மினும், வதந்திகளும் பிரிக்க முடியாதவை. இந்த வரிசையில் லேட்டஸ்ட் செய்தி, மீரா ஜாஸ்மினுக்கும், ஆந்திர தொழிலதிபர் ராஜேஷ் என்பவருக்கும் கல்யாணம் நடந்து விட்டது என்பதுதான்.
உண்மையில் மீரா நடிக்க வந்த பிறகு அவருக்கு நடக்கும் 6வது திருமணம் இது.
மீரா வதந்திகளில் அடிபடுவது புதிதல்ல. மலையாளத்தில் அவர் முதன் முதலாக நடித்த சூத்ரதாரன் படம் வெளியானபோதே மீரா குறித்த வதந்தியும் கிளம்பி விட்டது. அப்போது அவருக்கு திரையுலகில் பலருடன் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் ஒரு தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் ஆகிய மூன்று பேருடனும் மீரா படு நெருக்கமாக பழகுவதாகக் கூட பலமாக கிசுகிசுக்கப்பட்டது.
இதுதவிர திருவல்லாவைச் சேர்ந்த ஒரு இளைஞனுடன் (அவர் மீராவை விட 2 வயதுக் குறைந்தவராம்) மீரா காதல் கொண்டிருந்ததாகவும் இன்னொரு செய்தி கிளம்பியது. ஆனால் சினிமாவில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்ததால் அந்தப் பையனுடனான தொடர்பை விட்டு விட்டாராம் மீரா.
அதைக் கண்டு கடுப்பாகிப் போன அந்த பாய், எல்லா மேட்டரையும் போட்டு உடைக்கப் போவதாக மிரட்டினாராம். ஆனாலும் அப்படி எதையும் செய்யவில்லை அந்த தம்பி.
இந்த கிசுகிசுக்கள் எல்லாம் படிப்படியாக அடங்கியபோது, லோகிததாஸ் ரூபத்தில் இன்னொரு வதந்தி படு பலமாக கிளம்பியது. இதுதான் மீரா ஜாஸ்மினை பிரபலப்படுத்திய வதந்தியும் கூட என்பதால் மீராவே கூட இந்த வதந்தியை மறைமுகமாக ஆதரித்ததாகவும் ஒரு பேச்சு இருந்தது.
இயக்குநர் லோகிததாஸுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்த மீரா, அவருடன் படு நெருக்கமாக பழகி வந்தார். லோகிததாஸ் இயக்கிய படங்களில் மீராதான் நிரந்தர நாயகியாக இருந்தார்.
ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து லோகிததாஸுடன் இணைந்து வசிக்க ஆரம்பித்தார் மீரா. இருவரும் கல்யாணம் செய்து விட்டதாக கூட கூறப்பட்டது.
இந்த நிலையில், லோகி இயக்கத்தில் தமிழில் உருவான முதல் படமான (கட்டக் கடைசியும் அதுவே) கஸ்தூரி மான் படு தோல்வி அடைந்ததால் அப்செட் ஆனார் மீரா. அத்தோடு லோகி, மீரா உறவும் கசந்து போனது.
லோகியை விட்டு வெளியே வந்தார் மீரா. வெளியே வந்த வேகத்தில் கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதியின் மகனான ஆர்யன் செளகத் என்பவருடன் மீராவுக்கு நட்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் இந்த அரசியல்வாதி. அவரது மகன் ஆர்யன் தயாரித்த பாடம் ஒண்ணு, ஒரு விளப்பம் படத்தில் மீராதான் நாயகி.
இந்தப் படத்தின் மூலம் மீராவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. ஆனால், ஆர்யனின் அப்பாவின் பலமான சிபாரிசால்தான் இந்த விருது கிடைத்ததாக கிசுகிசுக்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு முன்பு, மீராவும், நடிகர் பிருத்விராஜும் நெருக்கமாக காதல் கொண்டிருப்பதாக மலையாள பத்திரிக்கைகளில் செய்திகள் படு சூடாக வந்தன.
இதை மீரா மறைக்கவில்லை, மறுக்கவில்லை. இந்த நேரத்தில் மீராவுக்கு தமிழிலும் படங்கள் வர ஆரம்பித்திருந்தன, தெலுங்கிலும் பிசியாக இருந்தார், மலையாளத்திலும் படு பிசியாக இருந்தார். ஆனால் பிருத்விராஜ் வளரும் நடிகராக இருந்தார்.
இதை உணர்ந்த மீரா, பிருத்விராஜை கடாச முடிவு செய்தார். அவர் முடிவு செய்த வுடனேயே அதை மோப்பம் பிடித்து விட்ட ஒரு தமிழக காவல்துறை அதிகாரி (அவருக்குப் பூர்வீகம் கேரளா) மீராவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
காக்கியும், காதலும் நீக்கமற கலக்க ஆரம்பித்ததைப் பார்த்த பிருத்விராஜ் சத்தம் போடாமல் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார், மீராவை மறந்து விட்டார்.
மீராவுடன் சேர்ந்த யோகமோ என்னவோ, அந்த காவல்துறை அதிகாரி ஒரு சிக்கலில் தொக்கி, சஸ்பெண்ட் ஆகிப் போனார். அப்புறம் என்ன, மீராவும், அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்து விட்டு தெலுங்கு நடிகர் ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இப்படியாக மீராவின் நட்பும், காதலும் விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதையாக நீண்டு கொண்டே வந்த நிலையில்தான் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைத்துப் பேசப்பட்டார். மீராவின் மீது கொண்ட மோகத்தால், திருமகன் படத்தின் கதையையே டோட்டலாக மாற்றினார் எஸ்.ஜே.சூர்யா.
படத்தில் மாளவிகா உள்ளிட்ட 3 ஹீரோயின்கள் இருந்தும் கூட மீராவுக்கு மட்டுமே முக்கியத்துவம் வருவது போல திரைக்கதையிலும் மாற்றம் செய்தார் சூர்யா.
இந்த நிலையில் சூர்யாவும், மீராவும் கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சில் வைத்து சத்தம் போடாமல் கல்யாணம் செய்து கொண்டு விட்டதாக ஒரு செய்தி கிளம்பி சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை சூர்யா மறுத்து விட்டார்.
ஆனால் மீரா சத்தம் காட்டாமல் இருந்து வந்தார். திருமகன் ரிலீஸாகி, தோல்வி அடைந்ததால், சூர்யாவையும் சத்தம் போடாமல் மறந்து விட்டார். தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து சூர்யா அடுத்து இயக்கப் போகும் படத்திலும் நடிக்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில்தான் தெலுங்கு தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை திருப்பதியில் வைத்து சத்தம் போடாமல் மீரா கல்யாணம் செய்து கொண்டு விட்டதாக புது செய்தி கிளம்பியுள்ளது.
ஒரு வகையில் பார்த்தால் மீராவுக்கு நடந்துள்ள 3வது கல்யாணம் இது. ஆனால் இது முற்றுப்புள்ளியா அல்லது கமாவா என்பது மீரா சொல்லப் போகும் பதிலில்தான் உள்ளது.