For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மீரா ஜாஸ்மின்-எஸ்.ஜே.சூர்யா காதல்?

  By Staff
  |

  கேரளப் புயல் மீரா ஜாஸ்மினுக்கும், சர்ச்சை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும்இடையே காதல் மலர்ந்துள்ளதாக கோலிவுட்டில் ஹாட்டான கிசுகிசு பரவஆரம்பித்துள்ளது.

  வாலி, குஷி படங்கள் மூலம் கோலிவுட்டின் சூப்பர் ஹிட் இயக்குனராக மாறியவர்சூர்யா. மூன்றாவதாக தானே தயாரித்த நியூ படத்தில் அவரே நாயகனாக நடித்தார்.முதல் இரண்டு படங்களையும் போல நியூ படமும் வெற்றிகரமாக ஓடியது.

  இதனால் அன்பே ஆருயிரே படத்திலும் சூர்யாவே ஹீரோவாக நடித்தார். இப்படமும்கையைக் கடிக்காமல் வெற்றி பெற்றது. இதில் நடித்த நிலாவோடு கிசுகிசுக்கப்பட்டார்.நிலாவை தனது கண்ட்ரோலிலேயே வைத்திருந்தார். சமீபத்தில் தான் இவரதுகண்ட்ரோலில் இருந்து வெளியேறினார் நிலா.

  அதன் பிறகு கள்வனின் காதலி படத்திலும் ஹீரோவாக நடித்தார் சூர்யா. ஆனால் படம்போணியாகவில்லை. இப்போது திருமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

  தெக்கத்தி சீமையை களமாக வைத்து தயாரிக்கப்படும் இப்படம், முக்குலத்தோரை குறிவைத்து எடுக்கப்படுவதாக தெரிகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கஆள் கிடைக்காமல் முதலில் அவஸ்தைப்பட்டனர். எல்லா முன்னணி நடிகைகளும்சூர்யாவுக்கு ஜோடி என்றவுடனேயே ஓடிப் போய் விட்டனர்.

  இந் நிலையில்தான் வந்து சேர்ந்தார் மீரா ஜாஸ்மின். சூர்யாவுடன் நடிக்க சம்மதம்தெரிவித்த அவர் ஏகப்பட்ட கண்டிஷன்களையும் உடன் வைத்தார். ஓவராக உரசக்கூடாது, ரொம்ப கட்டிப் பிடிக்கக் கூடாது, உம்மா எல்லாம் கூடவே கூடாது எனசூர்யாவுக்கு கண்டிஷன்களைப் போட்டார் மீரா.

  எல்லாவற்றுக்கும் ஒத்துக் கொண்ட சூர்யா, நடிச்சுக் கொடுத்தால் போதும் என்றுகையெடுத்துக் கும்பிடாத குறையாக மீராவை ஒப்பந்தம் செய்தார்.

  ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே சூர்யாவுக்கும், மீராவுக்கும்உரசல் ஏற்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. மீரா படத்திலிருந்துவிலகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் செய்திகள் கிளம்பின.

  ஆனால் இப்போதோ அதற்கு நேர் மாறான செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.மோதலில் உருவான சூர்யா, மீரா உறவு ஆழமான காதலாக மலர்ந்து வருகிறதாம்.

  மலையாள இயக்குனர் லோகிததாஸுடன், மீரா ஜாஸ்மின் மிக நெருக்கமாக பழகிவந்தார். இருவரும் ஒரே வீட்டில் குடியிருப்பதாக கூட செய்திகள் கூறின. ஆனால்சமீபத்தில் லோகிக்கும், தனக்கும் இடையே தொடர்பு கிடையாது என மீராபகிரங்கமாக அறிவித்தார்.

  இந் நிலையில் மீராவுக்கு இப்போது சூர்யா மீது இது வந்துவிட்டதாம்.

  நெருங்கிப் பழகி வரும் இருவரும் தங்களது காதலை இரு வீட்டாரிடமும் தெரிவித்துவிட்டார்களாம். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த சூர்யாவின் குடும்பம் கிருஸ்துவமதத்துக்கு மாறிவிட்டது. அதே போல கேரளத்தைச் சேர்ந்த மீராவுக்கும் மதம்கிருஸ்துவம் தான். எனவே இரு வீட்டாரும் ஓ.கே. சொல்லிவிட்டதாகவும்சொல்கிறார்கள்.

  சூட்டிங்கில் இருந்தபோது, தென் மேற்குப் பருவக் காற்று தேனிப் பக்கம் வீசியபோதுஏற்பட்ட இந்தக் காதல், இப்போது கல்யாணத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகசொல்கிறார்கள்.

  ரகசிய திருமணம்?

  இதற்கிடையே சூர்யாவும் மீரா ஜாஸ்மினும் தேனியில் திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டதாக நேற்று தகவல் பரவியது.

  சென்னையில் வளசரவாக்கத்தில் வியாபாரி சூட்டிட்கில் இருந்தார் சூர்யாவிடம் இது குறித்து கேட்டபோது,

  மீரா நல்ல நடிகை. அவரும், நானும் நல்ல நண்பர்கள் மட்டும் தான். காதல் ஏதும் கிடையாது. ரகசியத் திருமணம் செய்து கொண்டோம் என்று யாரோவேண்டுமென்றே தவறாக செய்தியை பரப்பிவிட்டு விட்டனர் என்றார்.

  மீரா ஜாஸ்மினிடம் பேச முயன்றபோது அவர் பெங்களூரில் கன்னட பட சூட்டிங்கில் இருப்பது தெரியவந்தது. அவரிடம் பேச முயன்றபோது அவரது மேனேஜர்தான் கிடைத்தார். மீரா படங்களில் பிசியாக இருக்கிறார். ரகசியத் திருமணம் என்பதெல்லாம் வெறும் வதந்தி என்றார்.நெருப்பில்லாம புகையாதேப்பா...

  Read more about: meera and sj surya in love
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X