»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

நடிகை மீரா ஜாஸ்மின் சமீபத்தில் மலையாளத் தயாரிப்பாளர் ஒருவரை ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகசெய்திகள் கசிகின்றன.

மலையாளத்தில் நம்பர் ஒன்னாக இருந்த மீராவுக்கும் அவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெரியவர்லோகிததாசனுக்கும் இடையே காதல் இருந்து வந்தது. நடுத்தர வயதைத் தாண்டிய லோகிததாசனுடனான இந்தக்காதல் குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.

இந் நிலையில் ரன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் மீரா. அடுத்தடுத்து வாய்ப்புக்கள் வந்தாலும்லோகிததாசனின் தலையீட்டால் பல தமிழ் சினிமா சான்ஸகளை இழந்தார். இதையடுத்து லோகிதசதாசனைகழற்றிவிட்டார்.

இந் நிலையில் அவரை வைத்து பாடம் ஒன்னு விலாபம் என்ற மலையாளப் படத்தைத் தயாரித்த செளக்கத்என்பவரை மீரா ரகசிய திருமணம் செய்து கொண்டாக மலையாளத்தின் நம்பர் ஒன் சினிமா பத்திரிக்கையான வெள்ளி நட்சத்திரம் செய்தி வெளியிட்டுள்ளது.

செளக்கத், கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் மகன்.

படப்பிடிப்பின்போது மீராவுக்கும் செதக்கத்குக்கும் காதல் மலர்ந்ததாகவும் ஆனால், இருவரின் குடும்பமும்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், திடீரென இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இப்போது பொள்ளாச்சியில் ஒரு மலையாள படப்பிடிப்பில் இருக்கிறார் மீரா. அவருடன் பேச நிருபர்கள் எடுத்தமுயற்சிகள் பலனளிக்கவில்லை. அவரகசு செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ள்ளது.

மீராவை சென்னையின் முக்கியமான ஒரு மலையாள போலீஸ் அதிகாரி விரட்டி வந்தது தனி கதை.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil