»   »  மீராவின் தேடல்!

மீராவின் தேடல்!

Subscribe to Oneindia Tamil

மீரா ஜாஸ்மின் சென்னையில் செட்டிலாகப் போகிறாராம். சென்னையில் தங்கியபடி தமிழ்ப் படங்களில் தீவிரமாகநடிக்கப் போகிறாராம்.

மலையாளத்தில் சக்கை போடு போட்டு வந்த மீரா ஜாஸ்மின், அப்போதெல்லாம் தமிழா? மசாலாப் படஉலகமாச்சே அது என்று அய்யரவாக பேசி வந்தார். ஆனால் திடீரென மலையாளத்தில் வாய்ப்பு குன்றி,தமிழில் வாய்ப்பு குதிரவே அப்படியே டிராக் மாறி தமிழைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார்.

ரன், சண்டைக்கோழி, கஸ்தூரி மான் என மீரா நடித்த படங்கள் நன்றாக ஓடவே அவருக்கும் இங்கே மார்க்கெட்உருவானது. அவர் நடித்த படங்களிலேயே சண்டக்கோழி தான் சூப்பர் டூப்பர் ஹிட் படம். இதனால் மீராவைத்தேடி நிறையப் படங்கள் வந்தன.

அதிலிருந்து நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் மீரா. இப்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் திருமகன்படத்தில் நடிக்கிறார். இருவருக்கும் காதல், பெங்களூரில் கல்யாணம் ஆகி விட்டது என்று சில நாட்களுக்கு முன்புதகவல்கள் கிளம்பின.

இதை சூர்யா மட்டுமே மறுத்து வந்தார். மீரா தரப்பிலிருந்து ஒரு தகவலையும் காணோம். இதனால் நடந்ததுஉண்மையா என்று கோலிவுட்காரர்களே குழம்பிப் போய்க் கிடக்கின்றனர்.

ஆனால் இன்னொன்று நடந்ததாக கோலிவுட்டில் குசுகுசுக்கிறார்கள். தனக்கும், சூர்யாவுக்கும் காதல் என்றுவெளியான செய்தியை சூர்யாதான் கிளப்பி விட்டிருப்பதாக மீரா சந்தேகப்பட்டாராம். இதையடுத்து சூர்யாவைசந்தித்த இனிமேல் இப்படி ஒரு செய்தி வந்தால் படத்திலிருந்து விலகி விடுவேன் என கண்டிப்பாக கூறினாராம்.

அதனால்தான் அரண்டு போன சூர்யா, அப்படியெல்லாம் இல்லை என்று மறுப்பு விட்டாராம். இந்தத்தகவலையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க இப்போது சென்னையில் செட்டிலாக முடிவு செய்துள்ளாராம் மீரா. இதற்காகஅருமையான வீட்டைப் பார்த்து வருகிறார். பீச்சாண்ட பெசன்ட் நகர் பக்கமாக வீடு இருந்தால் தேவலாம் எனபுரோக்கர்களிடம் சொல்லி வைத்துள்ளாராம். அப்படி இல்லாவிட்டால் சாலிகிராமம் பக்கம் சல்லிசான விலையில்வீடு இருந்தா பாருங்க என்றும் கூறியுள்ளாராம்.

புரோக்கர்களும் நாலாபக்கமும் அலைந்து திரிந்து மீராவுக்காக வீடு தேடிக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல்தமிழில் தீவிர கவனம் செலுத்தப் பாகிறாராம் மீரா. அதனால்தான் சென்னையில் வீடு தேடி வருகிறார்என்கிறார்கள்.

அவரது குடும்பத்துடன் இருந்து வந்த பிணக்கு இப்போது சுத்தமாக சரியாகி விட்டதாம். அவருடைய அக்காஜென்னி நடிப்பதாக இருந்தது. இப்போது அவர் தயாரிப்பில் இறங்கி விட்டார். அவருக்கு மீராதான் ரகசியமாகபைனான்ஸ் செய்வதாக கூறுகிறார்கள்.

சேச்சி சந்தோஷமா இருந்தா சரிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil