பக்கத்து ஸ்டேட் பிரம்மாண்ட இயக்குநருக்கு இப்படியொரு தர்ம சங்கட நிலைமையா? வசூல் மோசடி அம்பலம்!
ஹைதரபாத்: தனது பட ஹீரோவை டார்கெட் செய்து அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவை மாற்ற சொல்லி பக்கத்து ஸ்டேட் பிரம்மாண்ட இயக்குநர் முறையிட சென்று வேறு ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்ட நிகழ்வு பரபரப்பை கிளப்பி உள்ளது.
பெரிய பொருட் செலவில் உலகமே வியந்து பார்க்கும் படி படம் எடுத்து விட்டு இந்த மாதம் ரிலீஸ் செய்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த அந்த இயக்குநருக்கு கடைசி நேரத்தில் பெரிய செக்மேட் வைக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக நிலைமை சரியாகும் வரை ரிலீஸை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கிறோம் என அவர் அதிரடியாக அறிவித்து விட்டார்.

எதிர்ப்பு அரசியல்
பிரம்மாண்ட படத்தின் நாயகன் குடும்பத்தினருக்கும் மாநில அரசை ஆளும் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், ஒட்டுமொத்த சினிமா உலகுக்கும் ஆப்படிக்கும் செயலை அரங்கேற்றி உள்ளனர். அதன் காரணமாகவே அந்த நடிகரின் சித்தப்பா படத்தின் ரிலீசும் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.

பலனளிக்காத பேச்சுவார்த்தை
சினிமா தரப்பினர், தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என பலதரப்பட்ட அமைப்புகள் தலைமையை சந்தித்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளன. இதன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு என்ன செய்யலாம் என்கிற யோசனையில் பிரம்மாண்ட இயக்குநர் தவித்துக் கொண்டு இருந்தார்.

வீணான விளம்பரங்கள்
நாடு முழுவதும் இந்த படத்தை பெரிதளவில் கொண்டு செல்ல வேண்டும் என பல ஸ்டேஜ்களை போட்டு நடிகர்களை கூட்டிக் கொண்டு நடத்திய அனைத்து விளம்பரங்களும் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட காரணத்தால் வீணாகி போயுள்ளது. இதன் காரணமாக இயக்குநர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

இயக்குநரே நேரில் சென்றார்
மற்றவர்களை அனுப்பி வைத்து எந்த பலனும் கிடைக்கவில்லை. நாமே நேரடியாக சென்று பேசி பார்ப்போம். அப்போதாவது இரக்கம் காட்டுவாரா? என பிரம்மாண்ட இயக்குநரே சிங்கிளாக களமிறங்கி பிரச்சனையை தீர்க்க முடிவு செய்த நிலையில், இன்னொரு பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

வசூல் மோசடி
பெரிய பொருட்செலவில் இந்த படத்தை எடுத்திருக்கிறோம். ரிலீஸ் செய்ய ஏற்ற வழிகளை வகுத்து தாருங்கள் என தலைமையிடம் கேட்க ஏற்கனவே நீங்க எடுத்த படத்தின் வசூல் என்ன பதிலுக்கு அவர் கேட்க, இயக்குநர் தனக்கு தெரிந்த உண்மையை சொல்ல, அரசாங்கத்திடம் அந்த படத்தின் வசூல் குறைத்து காணப்பட்டு அதற்கான வரியை மட்டுமே செலுத்தி உள்ளனர் என ஒரே போடாக போட, ஏன் தான் வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்டோம் என திரும்பி வந்து விட்டாராம். இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிவது போல தெரியவில்லை என ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பேசிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











