»   »  விளம்பரமா ஆளை விடுங்க... தெறித்து ஓடிய நடிகை

விளம்பரமா ஆளை விடுங்க... தெறித்து ஓடிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விளம்பரங்களின் மூலம் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பிரச்சினைகளில் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். இதனால் தற்போது நடிகைகள் சோப்பு மற்றும் கிரீம் விளம்பரங்களில் நடிக்க பெரிதும் தயக்கம் காட்டுகிறார்கள்.

சமீபத்தில் அந்த மில்க் பியூட்டி நடிகையை தங்கள் கம்பெனியின் விளம்பரத்திற்கு நடிக்க வைக்க ஆர்வம் காட்டியஃபேர்னஸ் க்ரீம் விளம்பர நிறுவனம் நடிகையின் பதிலால் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.

Milk Beauty Actress Avoid Advertisements

என்னடா இது இவ்வளவு பெரிய தொகை கொடுத்ததும் நமது விளம்பரத்தில் நடிக்க நடிகை தயக்கம் காட்டுகிறாரே என்று விளம்பர நிறுவனம் யோசிக்கும் அளவுக்கு கறாராக வேண்டாம் என்று சொல்லிவிட்டார் நடிகை.

காரணம் என்னவென்று விசாரித்ததில் நாம் அந்த விளம்பரத்தில் நடிக்க நாளைக்கு யாராவது அந்த நடிகை சொல்லித்தான் கிரீமை போட்டேன், என்று வழக்கு எதுவும் தொடுத்து விடுவார்களோ என்று நடிகை பயப்படுகிறாராம்.

இவ்வளவுக்கும் அந்த விளம்பர நிறுவனம் சம்பளமாக பெரும் தொகையை கொடுக்க ஒப்புக் கொண்டது தான் இதில் ஹைலைட்டான விஷயம்.

ஹிந்தி சூப்பர் ஸ்டார், மலையாள சூப்பர் ஸ்டார் அடுத்தடுத்து எதிர்கொண்ட சட்ட சிக்கல்களால் அழகு சம்பந்தப்பட்ட பொருட்களில் நடிக்க நடிகைகள் பெரிதும் தயங்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.

அதே நேரம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆடைகள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனராம். அதுசரி...

English summary
Leading Fairness Cream Company Approach the milk beauty actress Regarding Brand Ambassador But The actress Strictly avoiding the offer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil