»   »  இளவரசரின் பிறந்த நாளுக்கு.. முத்தத்தை பரிசாகக் கொடுத்த நாயகி

இளவரசரின் பிறந்த நாளுக்கு.. முத்தத்தை பரிசாகக் கொடுத்த நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பிரமாண்ட வெற்றிபெற்ற அந்த நான்கெழுத்துப் படத்தின் நாயகனுக்கு பிறந்தநாள் பரிசாக முத்தத்தை வழங்கியிருக்கிறார் மில்க் பியூட்டி நடிகை.

அந்தப் படத்தில் நடிகையின் நடிப்பைப் பார்த்து வியந்து போன நாயகன், நாயகிகையை மனந்திறந்து பாராட்டினராம். மேலும் இந்தப் படத்தில் நடித்த பின்னர் நாயகன் மீது நாயகிக்கு தனி அக்கறை வேறு பிறந்திருக்கிறதாம்.

Milk Beauty Actress Birthday Gift

இந்நிலையில் நாயகன் தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடி மகிழ, இதற்கு நேரில் சென்று வாழ்த்திய நடிகை தனது செயலால் அங்கிருந்த அத்தனை பேரையும் திகைப்பில் ஆழ்த்தியிருகிறார்.

பிறந்த நாள் நாயகனின் கன்னத்தில் நச்சென்று முத்தம் கொடுத்து தனது வாழ்த்துக்களை நடிகை தெரிவித்தாராம். இது அங்கிருந்த அனைவரையும் மிரள வைத்து விட்டதாம்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நாயகியும், நாயகனும் காதலிப்பதாக பரபரப்பான பேச்சொன்று உலா வந்து கொண்டிருக்கிறது.ஆனால் இதனைப் பற்றி சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறக்கவில்லை என்பதுதான் ஹைலைட்.

சில மாதங்களுக்கு முன்னர் படத்தில் ராணியாக நடித்த நடிகைக்கும், நாயகனுக்கும் காதல் பிறந்ததாகவும் இருவரும் திருமணமே செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Prince Actor Recently Celebrate His Birthday. Milk Beauty Actress Gave as a Gift to the Kiss on the Actor Cheek.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil