»   »  கொள்கை, கோட்பாடு எதுவும் வேண்டாம் அதிரடி காட்டும் வீரம்

கொள்கை, கோட்பாடு எதுவும் வேண்டாம் அதிரடி காட்டும் வீரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி நடிகருடன் மட்டும்தான் ஜோடி சேருவேன் என்று, அடம்பிடித்த வீரமான நடிகை தற்போது வெகுவாக இறங்கி வந்திருக்கிறாராம்.

ஆரம்பத்தில் வளரும் நடிகர்களுடன் அடம்பிடிக்காமல் நடித்து வந்த நடிகைக்கு, சூர்யாமானவரின் படம் மூலம் சுக்ரதிசை தொடங்கியது.

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். சில காரணங்களால் தமிழ் சினிமாவில் காணாமல் போயிருந்த நடிகையை கோட் நடிகரின் படம் மீட்டுக்கொண்டு வந்தது.

மேலும் நடிகை வீரம் காட்டிய அந்த ராஜவம்சப் படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலைக் குவிக்க, மீண்டும் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி என்ற முடிவிற்கு வந்தார்.

ஆனால் நடிகையின் கொள்கையால் படங்கள் குறைய ஆரம்பித்ததுடன், மார்க்கெட்டை இழக்கும் சூழலும் உருவாகி இருக்கிறதாம்.

இதனால் தனது கொள்கையை கைவிட்டு சிறிய நடிகரின் படமென்றாலும் சரிதான், என்னும் முடிவிற்கு அம்மணி வந்துவிட்டாராம்.

அதனால் தான் தற்போது குவாட்டர் மற்றும் சுமார் மூஞ்சி குமார் போன்றவர்களின் படங்களில் நடிகை நடித்து வருவதாக கூறுகின்றனர்.

English summary
Sources Said the Milk Beauty Actress Abandoned her Policy and Pair with Young Heroes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil