»   »  மிஸ் யூ செல்லாக்குட்டி: இந்த வீராப்பு எல்லாம் நமக்கு தேவையா?

மிஸ் யூ செல்லாக்குட்டி: இந்த வீராப்பு எல்லாம் நமக்கு தேவையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
காமெடிக்கே திருப்பி வாங்க சாண்டல் ஹீரோ...வீடியோ

சென்னை: சாண்டல் காமெடி நடிகரின் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து முன்னணி நகைச்சுவை நடிகர் ஆனார் சாண்டல். அவர் காமெடி செய்த காலத்தில் தினமும் லட்சக் கணக்கில் சம்பாதித்தார்.

அவர் சம்பளத்தை பார்த்து சில ஹீரோக்களே வயித்தெரிச்சல் அடைந்தனர்.

நடிப்பு

நடிப்பு

ஒரு நல்ல நாளில் சாண்டல் காமெடி ஹீரோ அவதாரம் எடுத்தார். அந்த படம் ஹிட்டாக அதன் பிறகு நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறார்.

ஓடவில்லை

ஓடவில்லை

சாண்டல் காமெடி நடிகர் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் ஓடிவிடவில்லை. அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் நிதி பிரச்சனையில் அல்லாடுகின்றது.

வீராப்பு

வீராப்பு

நடிகரின் நிலையை பார்த்த சில நண்பேன்டா ஹீரோக்கள் மச்சான் எங்க படத்தில் காமெடியனாக நடிக்க வருகிறாயா என்று கேட்கிறார்கள். ஆனால் சாண்டலோ யாரை பார்த்து காமெடியனாக நடிக்க சொல்றீங்க என்று வெட்டி பந்தா பண்ணுகிறார்.

மிஸ்

மிஸ்

ஹீரோவை விட காமெடியனான சாண்டலை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்கள். நீங்கள் மீண்டும் காமெடி செய்து வித்தியாசமாக கலாய்ப்பதை பார்க்க ஆவலாக உள்ளனர்.

கர்வம்

கர்வம்

ஹீரோவான நீங்கள் மீண்டும் காமெடியன் ஆவதால் குறைந்துவிட மாட்டீர்கள். மாறாக ரசிகர்கள் உங்களை கொண்டாட காத்திருக்கிறார்கள். அதனால் நமக்கு எது நன்றாக வருமோ அதில் கவனம் செலுத்தி ராஜாவாக வாழுங்கள் நடிகரே.

ஆசை

ஆசை

காமெடியனாக இருந்தவர்கள் ஹீரோவானதும் மீண்டும் காமெடி செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்ததும் புதிது அல்ல. வீண் பந்தாவை விட்டுவிடுவது நல்லது சாண்டல். இது அறிவுரை அல்ல ரசிகர்களின் வேண்டுகோள்.

English summary
Fans are missing a comedian as he is adamant in sticking to his new role as hero. There is nothing wrong in making a come back as full time comedian.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X