»   »  பிரமாண்ட இயக்குநர் சொல்லியும் கூட பீட்டாவை விட்டு விலகாத 'வெள்ளச்சி'!

பிரமாண்ட இயக்குநர் சொல்லியும் கூட பீட்டாவை விட்டு விலகாத 'வெள்ளச்சி'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனி பீட்டா அமைப்பை பற்றி நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள் சினிமாக்காரர்கள். இளைஞர்கள் போராட்டமும் பீட்டா ஆதரவாளர்களுக்கு எழுந்துள்ள தீவிர எதிர்ப்பும்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்....

சின்ன நம்பர் நடிகை மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்த பிறகும் கூட அவரது படங்களை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று கொடி பிடிக்கிறது தமிழ் நாடு. அவரால் ஷூட்டிங்குக்கே போக முடியுமா என்ற நிலைதான்.

Model actress refused to support Jallikkattu

இருந்தாலும் இன்னும் கூட பீட்டா அமைப்பில் இரண்டு நடிகைகள் நீடிக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாயே திறக்கவில்லை. பளிச் நடிகையும் ஃபாரின் ரிட்டர்ன் நடிகையும்தான் அந்த இருவரும்.

இதில் ஃபாரின் ரிட்டர்ன் நடிகை உச்ச நடிகரின் படத்தில் நடித்து வருகிறார். நாளை பிரச்னை எதுவும் வரலாம் என்று அஞ்சிய இயக்குநர் நடிகையை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு ஸ்டேட்மெண்ட் விடச் சொன்னாராம். அதற்கு மறுத்து விட்டாராம் நடிகை. உச்ச நடிகருக்கு ஜோடியா நடிக்க அத்தனை நடிகைகள் போட்டி போட்ட போது இந்த பொண்ணுக்கு வாய்ப்பு தந்தது தப்பாப் போச்சே... என்று புலம்புகிறாராம் இயக்குநர்.

இதனால் பட ரிலீஸின் போது ஏதும் சிக்கல் வருமோ என்று பயத்தில் இருக்கிறது தயாரிப்பு தரப்பு.

English summary
Britain based model turned actress has refused to support Jallikkattu even after her director's advice.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil