3 நடிகைகளால் தூக்கத்தை தொலைத்த அம்மாக்கள்

By Siva

சென்னை: 3 நடிகைகளால் அவர்களின் அம்மாக்களுக்கு தூக்கம் போய்விட்டதாம்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் இரண்டு நடிகைகளும், இந்த இரண்டு மொழி தவிர இந்தி படத்திலும் நடித்து வரும் நடிகை ஒருவரும் இன்னும் சிங்கிளாக உள்ளனர்.

Moms of three actresses are sad

மூன்று நடிகைகளுக்கும் வயது ஏறிக் கொண்டே போகிறது. 30 வயதிற்கு மேல் ஆகியும் அவர்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஒரு நடிகை காதலித்து தோல்வி அடைந்தார். இன்னொரு நடிகை பிரபலம் ஒருவரை காதலிக்கிறார் ஆனால் அவரோ அம்மணியை கண்டுகொள்வது இல்லை.

மூன்றாவது நடிகை ஒரு பிரபலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார். அந்த 3 நடிகைகளுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் அம்மாக்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் நடிகைகள் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை.

திருமணம் செய்து கொண்டால் நடிப்புக்கு முழுக்கு போட வேண்டி வருமோ என்ற பயத்தால் திருமதி ஆக அவர்கள் தயாராக இல்லையாம். இதனால் அவர்களின் அம்மாக்கள் தான் நிம்மதி இல்லாமல் உள்ளனர்.

நடிகைகளுக்கு உயிர் இருக்கும் வரை படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் லட்சியம். இதற்கு யார் இடையூறாக வந்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டார்களாம்.

மூன்றில் இரண்டு பேர் நடிப்பில் ராட்சசிகள், ஒருவர் பாவம் என்ன தான் நடித்தாலும் தொடர்ந்து கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி வருகிறார். அவரை நம்பி வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுக்க இயக்குநர்கள் யாரும் தயாராக இல்லை.

மேலும் அவரின் மார்க்கெட் நிலவரமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இருப்பினும் அம்மணி தனது கெரியர் சூப்பராக சென்று கொண்டிருப்பது போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X