பணத்தை வச்சு என்ன செய்ய?.. என் அம்மாவை கைவிட்டவரை சும்மா விடமாட்டேன்.. நடிகர் மகள் சபதம்
சென்னை: இந்த நடிகருக்கு சினிமாவில் பார்த்து பார்த்து தூக்கிவிட்டது அந்த நடிகரின் அப்பாவும் அப்பாவுக்கு வேண்டப்பட்டவர்களும் தான். நடிகருக்கு ஓரளவுக்கு நடிக்க வந்தாலும் தான் சினிமாவில் சேர்த்த சொத்துக்களை விற்று மகனை ஆளாக்க படாத பாடு பட்டவர் அவரின் அப்பாதான். என்னதான் சினிமாவில் அவருக்கு என்று தனி நற்பெயர் இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் இயக்குநர் மிகவும் தங்கமானவர் என்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர், மனைவி, குழந்தைகள், குடும்பம் என அவர்களுக்காக நேரம் ஒதுக்காமல் இல்லை.
அவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் அவரது மனைவிதான் என்று தனது மனைவி சொல்லை மீறாமல் இருப்பாராம். இந்த பெரிய மனுஷன் தங்கமானவராக இருக்கிறார், அவரது மகனும் அப்படித்தான் இருப்பார் என்று நடிகருக்கு தனது மகளைத் திருமணம் செய்து வைத்துள்ளார் தொழிலதிபர். நடிகரும் திருமணத்திற்கு முன்னர் நடிகை ஒருவருடன் ஓவர் நெருக்கமாக இருந்திருந்தாலும், தனது அப்பா சொன்னதைக் கேட்டு நடிகையையுடன் ஜாலியாக சுற்றி முடித்துவிட்டு கழட்டி விட்டுள்ளார்.

வில்லியாக வந்த நடிகை: ஆனால் திருமணத்திற்கு பின்னர் நடிகர் தனது மனைவி, ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என வாழ்க்கையில் சிறப்பாக செட்டில் ஆகிவிட்டார். நிம்மதியாக சென்று கொண்டு இருந்த திருமண வாழ்க்கையில் வில்லியாக என்ட்ரி கொடுத்தார் நடிகருடன் இணைந்து நடித்த இளம் நடிகை. நடிகரும் நடிகையை தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆக்க, வீட்டிற்குள் பிரச்னை பெரிய அளவிற்கு வளர காரணமாக நடிகைதான் இருந்துள்ளார்.
வைராக்கியத்தில் மகள்: ஒரு கட்டத்தில் பொண்டாட்டியும் வேண்டாம், மகனும் வேண்டாம், மகளும் வேண்டாம் என முடிவெடுத்த நடிகர் நடிகையே கதி என்று இருந்துள்ளார். நடிகைக்காக நடிகர் வீட்டில் மனைவியுடன் அதிக அளவில் சண்டை போட்ட போது எல்லாம் மகள் தான் வீட்டில் இருந்து நடிகரின் சைக்கோ தனங்களை பார்த்தாராம். அதனாலோ என்னவோ, தனது அம்மாவை கைவிட்டுவிட்டு நடிகை மீது இருக்கும் மோகத்தில் மிகவும் மோசமாக அம்மாவை நடத்திய அந்த நடிகரை எங்கேயும் தனது அப்பா என்று கூறவே விரும்புவது இல்லையாம். நடிகரிடம் இருந்து தனக்கு பணம் செலவுக்கு வந்தாலும் அந்த பணத்தை தனக்கு அனுப்ப வேண்டாம் என்று மிகவும் கோபத்துடன் கூறி உள்ளராம் மகள். இது மட்டும் இல்லாமல் சமயம் பார்த்துத்தான் நடிகரின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று அவர் அமைதியாக இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications