காதலர் ஓகே சொன்னாலும்.. அடம் பிடிக்கும் மாமியார்.. நடிகை காதலுக்கு இப்படி ஒரு பிரச்சினையா?
நடிகையின் காதலுக்கு அவரது வருங்கால மாமியார் மூலம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சென்னை: நடிகையின் காதல் ஊரறிந்த விசயம் தான். ஆனால் அவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்பது தான் ரசிகர்கள் முன்வைக்கும் கேள்வி.
ஊர் ஊராக இருவரும் சுற்றி வருவதும், ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவதும் என காதலில் இருவரும் பிசியாக இருக்கிறார்கள். ஏறக்குறைய இருவருமே நேரடியாக தங்களது காதலை ஒப்புக் கொண்டும் விட்டனர்.
நடிகை சினிமாவில் தனது இலக்கை அடைந்த பிறகே திருமணம் எனத் தெளிவாகச் சொல்லி விட்டதாகத் தெரிகிறது. காதலரும் இதற்கு ஓகே சொல்லி விட்டார். அதனால் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிகை தீவிரமாக நடித்து வருகிறார்.

குடும்பங்கள் சந்திப்பு
இந்நிலையில், சமீபத்தில் இருவரது குடும்ப உறுப்பினர்களும் நேரில் சந்தித்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் உலா வந்தன. இதனால் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

மாமியார் அவசரம்
ஆனால், தற்போது வெளிவந்துள்ள தகவல்படி, மகனின் திருமணத்திற்கு மாமியார் அவசரப்படுத்துகிறாராம். ஆனால் நடிகை அதற்கு சம்மதிக்கவில்லையாம். இதனால் காதலர்கள் மத்தியில் மனக்கசப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

யாரை சமாதானம் செய்ய...
காதலர் நடிகையை சமாதானம் செய்யப் போகிறாரா இல்லை தாயை சமாதானம் செய்யப் போகிறாரா என்பது தெரியவில்லை. இவரையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்பது தான் நடிகையின் ரசிகர்கள் விரும்புவது.

லட்சியத்தை விட்டுக்கொடுப்பாரா?
ஒருவேளை காதலரின் தாய் இறங்கி வர மறுத்தால், காதலருக்காக தனது லட்சியத்தை நடிகை விட்டுக்கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி நடந்தால், ரசிகர்கள் செம ஹேப்பி அண்ணாச்சி.


Click it and Unblock the Notifications











