For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வேலைக்கு ஆகாத அப்பா.. மகனுக்காக இறங்கி போராடிய அம்மா.. நள்ளிரவில் பைசல் ஆன பஞ்சாயத்து!

  By Staff
  |

  சென்னை: விரல் நடிகரின் தலைவலியை போக்க பல கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் சில பல செட்டில்மென்ட்டுகளையும் செய்திருக்கிறாராம் அவரது அம்மா.

  மனம் போன போக்கில் தனக்கு இருக்கும் மார்க்கெட்டை பற்றி கூட கவலைப்படாமல் இஷ்டத்துக்கு திரிந்ததால் விரல் நடிகருக்கு ஏகப்பட்ட வம்புகள் வரிசைக் கட்டி நின்றன.

  8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதயநோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

  ஒரு கட்டத்தில் எதிர்ப்புகள் விஸ்வரூபம் எடுக்க அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி போய்விட்டாராம்.

  எப்படி எல்லாமோ ஐஸ் வைக்கும் ஒல்லி நடிகை.. மீண்டும் சிக்குவாரா அந்த மாஸ் ஹீரோ.. கோலிவுட் கிசுகிசு!எப்படி எல்லாமோ ஐஸ் வைக்கும் ஒல்லி நடிகை.. மீண்டும் சிக்குவாரா அந்த மாஸ் ஹீரோ.. கோலிவுட் கிசுகிசு!

  வேலைக்கு ஆகாத அப்பா

  வேலைக்கு ஆகாத அப்பா

  திரைத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும், இந்த விவகாரத்தில் மகனுக்காக அப்பாவால் எந்தவொரு உதவியும் செய்ய முடியவில்லையாம். மாறாக அவர் மேலும், பல இடியாப்ப சிக்கல்களையே மகன் தலையில் இறக்க துடித்துப் போய் விட்டாராம் அந்த விரல் நடிகர்.

  போதைக்கு அடிமை

  போதைக்கு அடிமை

  தனக்கு ஏகப்பட்ட திறமைகள் இருந்தாலும் சாதிக்க முடியவில்லையே டாப் இடத்துக்கு முன்னுக்கு வர முடியவில்லையே படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறதே என மிகப்பெரிய மனக் கஷ்டத்திற்கு ஆளான விரல் நடிகர்கள் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு குடி போதைக்கு அடிமையாகி கிடந்தார்.

  பணத்தை போட்டவர்கள்

  பணத்தை போட்டவர்கள்

  இவரை நம்பி புதிய படங்களுக்கு பணத்தை போட்ட சில தயாரிப்பாளர்கள் இவரால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதை அறிந்து கொண்டு இவருக்கு நெருக்கடி கொடுக்க, அவர்களுக்கும் சரியான முறையில் பதில் அளிக்காமல் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என அலைக் கழித்து வந்தாராம்.

  முறையீடு

  முறையீடு

  பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு படம் நடித்துக் கொடுக்க மாட்டேன் என்றும் தான் சொல்லும் நேரத்தில் தான் ஷூட்டிங் வைக்க வேண்டும் என்றும் விரல் நடிகர் வம்பு செய்கிறார் என அந்த மேலிடத்தில் சில பல தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி முறையிட விரல் நடிகருக்கு எண்ட் கார்டு போட அவர்களும் முடிவுக் கட்டினர்.

  அம்மாவுக்கு கஷ்டம்

  அம்மாவுக்கு கஷ்டம்

  நம்ம மகன் இப்படி கஷ்டப்படுறானே, அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளை எப்படியாவது நாம் இறங்கினால் தான் சரி செய்ய முடியும் என நினைத்த அவர் பல இன்னல்கள் பல பேச்சுக்களை கடந்து வெற்றிகரமாக மகனின் வாழ்க்கையில் இருந்த தடைகளை எல்லாம் தகர்ந்து எறிந்து இருக்கிறார்.

  அந்த கருமத்தை தூக்கிப் போடு

  அந்த கருமத்தை தூக்கிப் போடு

  உன்னை நம்பி லட்சக் கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நீ பாட்டுக்கு எதையும் கண்டு கொள்ளாமல் அந்த கருமத்தை குடித்துக் கொண்டு உன்னையே சீரழித்துக் கொண்டிருக்கிறீயே.. முதலில் அந்த கருமத்தை தூக்கிப் போடு மத்ததை நான் பார்த்துக்கிறேன் என அம்மா போட்ட அந்த கண்டிஷனுக்கு செல்ல மகன் ஒத்துக் கொள்ளவே அவர் விவகாரத்தில் அப்பாவை ஒதுக்கிவிட்டு களமிறங்கி டோட்டலாக நல்ல பிள்ளையாக அவரை மாற்றி இருக்கிறாராம்.

  செட்டில்மென்ட்

  செட்டில்மென்ட்

  யாருக்கு எவ்வளவு பணம் தர வேண்டும், யாருக்கு என்ன வாக்குறுதியை கொடுத்து சரிகட்ட வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அனைத்து செட்டில்மென்ட்டையும் முடித்தும் முடிப்பதாக உறுதியளித்தும் இந்த பிரச்சனையில் இருந்து பெற்ற பிள்ளையை மீட்டெடுத்து இருக்கிறார்.

  கடிவாளம் போட்டு

  கடிவாளம் போட்டு

  படத்தில் சிறப்பாக நடிப்பதில் மட்டும் நீ கவனம் செலுத்தினால் போதும், மற்ற எந்த பிரச்சனையையும் தலையில் போட்டுக் கொள்ள வேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என அவர் கொடுத்த ஊக்கம் தான் இவ்வளவு சீக்கிரமாக அந்த விரல் நடிகரின் மொத்த பிரச்சனையும் முடியக் காரணம் எனக் கூறுகின்றனர்.

  English summary
  Actor’s mother only clears all the struggle against on his son’s career and make good path to actor start over his success run.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X