காலேஜை முடிச்சுட்டு எது வேணா பண்ணிக்க... கண்டிப்பு காட்டும் தாய்க்குலம்!
மலையாளத்தில் இருந்து அறிமுகமான அந்த மங்களகரமான நடிகை வாய்ப்பே இல்லாமல் ஒரு பக்கம் தவிக்க, இன்னொரு பக்கம் படி படி என்று தாயார் டார்ச்சர் தருகிறாராம்.
மங்களகரமான நடிகை பத்தாவது படிக்கும்போதே சினிமாவுக்கு வந்துவிட்டார். அம்மா டீச்சர் என்பதால் படிப்பு தான் ஃபர்ஸ்ட் என்று காலேஜ் சேர்த்து படிக்க சொல்லி ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டார்.
ஆனாலும் கூண்டுக்குள் சிக்க விரும்பாத நடிகை மீண்டும் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடுகிறார். அப்படி கிடைத்தது தான் மாஸ்டருடன் நடிக்கும் வாய்ப்பு. அந்த படத்துக்காக உடல் எடையை எல்லாம் குறைத்தார். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை.
எனவே சும்மா இருக்கும் மகளை பார்த்து அம்மா, "ஒழுங்கா காலேஜ் படிப்பை முடிச்சுட்டு அப்புறம் எது வேணாலும் பண்ணிக்க...," என்று கறார் காட்டுகிறாராம்.
படிப்பு வந்தா படிக்க மாட்டாங்களா மேடம்?!


Click it and Unblock the Notifications











