குழந்தையே பெத்தாச்சு.. இளமை குறையலயே.. இன்னொரு ரவுண்டு வர நடிகை எடுத்த சில்மிஷ முடிவு

By Staff

சென்னை: தென்னிந்திய திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும், குழந்தை பெற்ற பிறகும் நடிகைகள் செகண்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட் செய்வது இப்போது ட்ரெண்டாகிவிட்டது. அந்த வகையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து, டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அந்த ஸ்லிம் நடிகை, சமீபத்தில் தான் ஒரு குழந்தைக்கு தாயானார்.

பொதுவாக குழந்தை பெற்றெடுத்த பிறகு நடிகைகளின் உடல்வாகு மாறிவிடும், பழையபடி ஹீரோயினாக நடிப்பது கஷ்டம் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் எப்போதும் உண்டு. ஆனால், இந்த நடிகையைப் பொறுத்தவரை பிரசவத்திற்குப் பிறகும் அணுவளவும் இளமை குறையாமல், அப்படியே 'ஸ்வீட் சிக்ஸ்டீன்' போல மிரள வைக்கிறாராம். இதைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமன்றி, தயாரிப்பாளர்களும் கூட வியப்பில் வாயடைத்துப் போயுள்ளனர்.

இளமை அப்படியே இருப்பதால், குணச்சித்திர வேடங்களிலோ அல்லது அண்ணி, அக்கா கேரக்டர்களிலோ நடிக்க நடிகைக்கு சுத்தமாக விருப்பமில்லையாம். சினிமாவில் ஹீரோயினாகவே இன்னொரு ரவுண்டு வர வேண்டும் என்பதில் அவர் வெறியாக இருக்கிறார். இதற்காக நடிகை ஒரு 'சில்மிஷ' முடிவை கையில் எடுத்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Motherhood Hasn t Slowed Her Down Popular Actress Plans Glamorous Comeback for Second Innings

லிப் லாக் வரை ஓகே: "சினிமாவில் மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்றால் கமர்ஷியல் படங்களில் கிளாமர் காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என்பதை நடிகை புரிந்து வைத்துள்ளார். அதனால், முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட (Item Song) அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளாராம். அதுமட்டுமின்றி, கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியில் தாராளம் காட்டவும், லிப்-லாக் காட்சிகளில் நடிக்கவும் தனக்கு எந்த தடையும் இல்லை என தூது விட்டு வருகிறாராம்." தயாரிப்பாளர்கள் பலரும் பட்ஜெட் பற்றாக்குறையால் தவித்து வரும் இந்த நேரத்தில், முன்னணி நடிகை ஒருவரே இப்படி கிளாமருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்திருப்பது பல கமர்ஷியல் இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உச்சகட்ட கவர்ச்சி: இதன் முதற்கட்டமாக, சமூக வலைதளங்களில் உச்சக்கட்ட கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி, போட்டோக்களை தட்டிவிட்டு வருகிறார். குழந்தையே பெற்றாலும் கிளாமரில் கொஞ்சம் கூட குறையாத இந்த நடிகையின் அதிரடி முடிவால், தற்போதைய இளம் நடிகைகளுக்கு டஃப் காம்படிஷன் ஆரம்பமாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X