அந்த நடிகைக்கு ஒர்க்அவுட்டானது, படக்குழுவுக்கு ஆகலையே: சோனமுத்தா போச்சா

By Siva

சென்னை: உச்ச நடிகரின் படக்குழு செய்யும் காரியம் நடிப்பு என்பது அனைவருக்கும் தெரிகிறது.

நடிகை ஒருவர் அனைவரும் தன்னைப் பற்றியே எப்பொழுதும் பேச வேண்டும் என்பதற்காக ஏதாவது சர்ச்சையை கிளப்பிக் கொண்டே இருப்பார். தற்போது உச்ச நடிகரின் படக்குழு அதை தான் செய்து கொண்டிருக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

உச்ச நடிகரின் புதுப்பட போட்டோஷூட் புகைப்படங்கள் கசிந்தபோது அது யார் என்று கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாராம் இயக்குநர்.

படம்

படம்

போட்டோஷூட் புகைப்படங்களை படக்குழுவை சேர்ந்த யாரோ தான் கசியவிட்டனர். இந்நிலையில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்து தினமும் ஒரு புகைப்படம் கசிவதும் படக்குழுவினரால் தான் என்று நம்பப்படுகிறது. படத்திற்கு இப்படியும் விளம்பரம் தேடச் செய்வதாக கூறப்படுகிறது.

கோபம்

கோபம்

புகைப்படங்கள் தினமும் கசிவதால் இயக்குநர், படக்குழு கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்களே கசியவிட்டுவிட்டு அவர்களே கோபப்படுவார்களாம். இது உலக மகா நடிப்புடா சாமி என்று நெட்டிசன்கள் சிரிக்கிறார்கள்.

கவலை

கவலை

படக்குழுவின் செயல் என்று புரியாத உச்ச நடிகரின் ரசிகர்கள் தான் பாவம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதே இயக்குநர் லீடர் நடிகரை வைத்து படம் எடுத்தபோது இப்படி எல்லாம் தினமும் ஒரு புகைப்படம் கசியவில்லையே. அப்படி எதையும் கசியவிடும் ஆளும் இல்லை அவர்.

காமெடி

காமெடி

படத்திற்கு விளம்பரம் தேட நினைத்து போட்ட கணக்கு தப்புக் கணக்காகிவிட்டது. மக்கள் படத்தை பற்றி பேசினாலும் படக்குழுவின் இந்த சீப் நடவடிக்கையை பார்த்து சிரிக்கிறார்கள். இவுங்களே கசியவிடுவாங்களாம், இவுங்களே கோபப்படுவார்களாம், இவுங்களே விசாரண நடத்துவார்களாம். நல்லா இருக்குப்பா உங்க நடிப்பு என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் பேசத் துவங்கிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X