»   »  அரசியல் புள்ளிகளின் 'அந்தரங்க லீலைகள்' படமாகிறது!

அரசியல் புள்ளிகளின் 'அந்தரங்க லீலைகள்' படமாகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில மாதங்களாக இணைய தளங்களில் வைரலாக வலம் வந்தன திமுக அரசியல் புள்ளியும், அதிமுகவின் மகளிர் அணி மங்கையும் டெல்லியில் அந்தரங்கமாக இருக்கும் புகைப்படங்கள்.

ஆனால் அதுகுறித்து இரு தரப்புமே பெரிதாக மறுப்புத் தெரிவிக்கவில்லை. மார்ப்பிங் என்று மட்டும் லைட்டாக சொல்லிவிட்டு அமைதி காத்தனர். அதன் பிறகு, சில நாட்கள் கழித்து விமான நிலையத்தில் திமுக புள்ளியின் கன்னத்தில் அறைந்து பரபரப்பு கிளப்பினார் அதிமுக பெரும்புள்ளி. ஆனால் காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. அவர்களும் சொல்லவில்லை.


Movie in shoot based on politician's secret life

அரசியலில் இருவேறு துருவங்களாக, ஜென்ம பகைவர்களாகத் திகழும் இரு கட்சியின் முக்கியப் பதவியில் உள்ள இந்த இருவருக்கும் என்ன தொடர்பு? எப்படி தொடர்பு? இருவரையும் தலைமை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? என பல விடை தெரியாத கேள்விகள், சம்பந்தப்பட்ட கட்சிகளின் தொண்டர்களுக்கு.


இந்த சர்ச்சைகள் மெல்ல மெல்ல அமுக்கப்பட்டு, அமைதியாக்கப்பட்ட நிலையில்தான், மீண்டும் விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளார், சர்ச்சை சினிமாக்காரர். அதிமுக பெண் தரப்புக்கு ரொம்ப நெருக்கமானவராக இருந்துள்ளார் சர்ச்சை நாயகர். இருதரப்பைச் சேர்ந்த பல விஷயங்கள் இவருக்கு ரொம்பவே தெரியும் என்பதால், அந்த சம்பவங்களையே வைத்து ஒரு படமாக எடுக்க ஆரம்பித்துள்ளார்.


இந்தப் படம் வரும்போது ஒரு பரபரப்பு கிளம்பும் என்கிறார்கள் அரசியல் - திரையுலக வட்டாரத்தில்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
A controversial cinema person is now making a movie based on two popular politicians in Tamil.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil