அடுத்த பட ஹீரோயினுடன் ஃபாரீன் டூர் கிளம்பிய வம்பு நடிகர்.. இதுதான் கோலிவுட்டில் இப்போ டிரெண்ட் போல!
சென்னை: வம்பு நடிகரின் புதிய படம் பிரம்மாண்டமாக உருவாகப் போகிறது, அதற்காக அவர் ஏகப்பட்ட வித்தைகளை கற்று வருகிறார் என ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அந்த இசை பிரபலத்துடன் கச்சேரி கலாட்டா என காலத்தை கழித்து வந்த வம்பு நடிகர் தற்போது அடுத்த படத்திற்கு இயக்குநர் தேடித் தேடி கண்டு பிடித்த ஹீரோயினை தனியாக கூட்டிக் கொண்டு வம்பு நடிகர் ஃபாரீன் டூர் கிளம்பி விட்டாராம்.
கோலிவுட்டில் சமீப காலமாக மாஸ் நடிகர் ஆரம்பித்து வைத்த இந்த டிரெண்டை ஒவ்வொரு நடிகர்களாக ஃபாலோ செய்யத் தொடங்கி இருப்பதாகவும் அதுவும் தயாரிப்பாளர் காசுல இப்படி நடிகர்கள் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னாடி கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகிறதா என தனிப்பட்ட முறையில் ரிஹர்சல் செய்வதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வம்பு நடிகர் கம்பேக் கொடுத்த நிலையில், ஒரே ஒரு படம் மட்டுமே ஓடிய நிலையில், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், அதை பற்றியெல்லாம் மனுஷன் கவலையே படாமல் ஜாலி டூர் செய்து வருகிறார் என்கின்றனர்.
காத்திருந்து காத்திருந்து: ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட்டு அடுத்த படத்தை ஆரம்பித்து விடலாம் என நினைத்து உச்ச நடிகருக்காக காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போன அந்த இயக்குநர் தற்போது வம்பு நடிகர் எப்போ ரெடியாகி வருவார் ஷூட்டிங்கிற்கு எப்போ போவோம் என்றே தெரியாமல் காத்திருக்கிறாராம்.
தயாரிப்பாளர் ஒரு பக்கம் ஃபாரீன் டூர் அடித்து வரும் நிலையில், ஹீரோ இன்னொரு பக்கம் ஹீரோயினுடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த இயக்குநர் நிலைதான் அந்தோ பரிதாபம் என்கின்றனர்.
திருமணத்தில் ஆசையில்லை: வம்பு நடிகருக்கு வீட்டில் எத்தனை பெண்களை பார்த்தாலும், ஏதாவது காரணத்தை சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டே வரக் காரணம் அவருக்கு திருமணத்தில் எல்லாம் ஆசையில்லை என்றும் ஒவ்வொரு புதுப்படத்தின் போது புதிய ஹீரோயின்களுடன் என்ஜாய் பண்ணிட்டே லைஃப்பை ஹேப்பியாக ஓட்ட வேண்டும் என்பது தான் ஆசை என பகீர் தகவல்களும் சினிமா வட்டாரத்தில் கசியத் தொடங்கி உள்ளன.
இதற்கு முன்னதாக அவருடன் நடித்த முக்கால்வாசி நடிகைகளுடன் எல்லாவித சந்தோஷத்தையும் நடிகர் அனுபவித்து விட்டார் என்றும் தற்போது அந்த அடுத்த பட ஹீரோயினுடன் தான் மனுஷன் ஜாலியா ரொமான்ஸ் செய்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
ஆனால், இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்றும் அடுத்த படத்துக்காக நடிகர் சின்சியராக தன்னை தயார்ப்படுத்தி வருகிறார் என்றும் படம் வெளியாகும் போது அவருடைய சின்சியாரிட்டி தெரியவரும் என்றும் அவரது தரப்பு கூறி வருகிறது.


Click it and Unblock the Notifications











